Virat Kohli Congrats Indian Women Team Wins Australia Women in Semi Final 2025 Star Sports - India W vs Australia W Semi Final 2025 Match Highlights
விளையாட்டு

வெற்றியை பதிவு செய்த இந்திய மகளிர் அணி-விராட் கோலி வாழ்த்து!

Virat Kohli Congrats Indian Women Team Wins Australia W in Semi Final 2025 : இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இந்திய மகளிர் அணிக்கு, வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்த விராட் கோலி.

Bala Murugan

இந்தியா ஆஸ்திரேலியா மோதல்

Virat Kohli Congrats Indian Women Team : மும்பை, இந்தியாவில் நடந்து வரும் 13-வது மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா(ICC Women's World Cup 2025) இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இதில், மும்பையின் புறநகர் பகுதியான நவிமும்பையில் உள்ள டி.ஒய். பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இந்த 2-வது அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா- ஆஸ்திரேலியா அணிகள் மோதின.

இலக்கு நிர்ணயித்த ஆஸ்திரேலிய அணி

இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலிய அணி 49.5 ஓவர்களில் ஆஸ்திரேலிய அணி 338 ரன்களில் ஆல் அவுட் ஆனது. ஆஸ்திரேலிய அணியின் லிட்ச்பீல்ட் 77 பந்துகளில் சதமடித்து(India W vs Australia W Semi Final 2025) அணிக்கு வலு சேர்த்தார். இதையடுத்து 339 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற மெகா இலக்கை நோக்கி இந்திய அணி ஆடியது.

ஜெமிமா ரோட்ரிக்ஸின் 3 வது சதம் :

களத்தில் இறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் ஷபாலி வர்மா (10 ரன்), ஸ்மிர்தி மந்தனா (24 ரன்) ஏமாற்றம் அளித்தனர். 3-வது விக்கெட்டுக்கு ஜெமிமா ரோட்ரிக்சும், கேப்டன் ஹர்மன்பிரீத் கவுரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டதுடன் ரன்ரேட்டை 6-க்கு குறையாமல் நகர்த்தினர். வெற்றிப்பாதைக்கு அடித்தளமிட்ட இந்த ஜோடி ஸ்கோர் 226-ஐ எட்டிய போது பிரிந்தது. ஹர்மன்பிரீத் கவுர் 89 ரன்களில் (88 பந்து, 10 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தீப்தி ஷர்மா 24 ரன்னில் ரன்-அவுட் ஆனார். இதற்கிடையே ஜெமிமா ரோட்ரிக்ஸ் தனது 3-வது சதத்தை பதிவு செய்து வெற்றி பாதைக்கு அடித்தளமிட்டார்.

விராட் கோலி வாழ்த்து

ஆட்டத்தின் இறுதியில் அமன்ஜோத் கவுரின் பவுண்டரியுடன் இந்தியா வெற்றிக்கனியை பறித்தது. இந்திய அணி 48.3 ஓவர்களில் 5 விக்கெட்டுக்கு 341 ரன்கள் குவித்து 5 விக்கெட் வித்தியாசத்தில் சூப்பரான வெற்றியோடு 3-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த நிலையில், இந்திய மகளிர் அணிக்கு இந்திய கிரிக்கெட் ஆடவர் அணியின் வீரர் விராட் கோலி(Virat Kohli Wishes Women Team) வாழ்த்து தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க : உடல்நிலை குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் பதிவு- ரசிகர்கள் உற்சாகம்!

ஜெமிமாவின் ஆட்டம் சிறப்பானது

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், ஆஸ்திரேலியா போன்ற வலிமையான எதிராளியை எதிர்த்து இந்திய அணி சிறப்பான வெற்றியை பெற்றுள்ளது. ஒரு பெரிய ஆட்டத்தில் ஜெமிமாவின் சிறப்பான ஆட்டம். உண்மையான மன உறுதி, நம்பிக்கை மற்றும் ஆர்வத்தின் வெளிப்பாடு. அருமை இந்தியா. என்று தெரிவித்துள்ளார்.