Annamalai on Ungaludan Stalin Scheme 
முக்கியச் செய்திகள்

திட்டங்களுக்கு “கலர் கலரா பெயர்கள்” ஆனால்? : அண்ணாமலை காட்டம்

Annamalai on Ungaludan Stalin Scheme : கலர் கலரா திட்டங்களுக்கு பெயர் வைத்தால் மட்டும் போதாது, அதை முறையாக செயல்படுத்த வேண்டும் என்று அண்ணாமலை கேட்டுக் கொண்டுள்ளார்.

Kannan

ஆற்றில் வீசப்பட்ட கோரிக்கை மனுக்கள் :

Annamalai on Ungaludan Stalin Scheme : உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் மக்கள் அளித்த கோரிக்கை மனுக்கள், திருப்புவனம் அருகே வைகை ஆற்றில் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டு இருந்தது தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது. மனுக்கள் ஆற்றில் மிதந்து வந்ததை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.

வெற்று திட்டங்கள், வீண் விளம்பரங்கள் :

இதுபற்றி அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில், “ கவர்ச்சிகரமான பெயரில் திட்டங்களை அறிவித்தால் மட்டும் போதுமா? மக்கள் வரிப்பணத்தின் மூலம் வீண் விளம்பரங்களில் தான் திமுக அரசு கவனம் செலுத்துகிறது. மக்களின் கோரிக்கை மனுக்கள் கூட குப்பை வீசப்படும் அவலம் திமுக ஆட்சியில் தான் நடக்கிறது.

ஆற்றில் மனுக்கள் - திமுக ஆட்சி :

சிவகங்கை மாவட்டத்தில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பெறப்பட்ட முகாம்கள், ஆற்றுக்குள் சென்றது எப்படி? உங்களுடன் ஸ்டாலின் முகாமில் கொடுத்தால் அவற்றின் நிலை என்ன என்பது வைகை ஆற்றை பார்த்தால் தெரிகிறது.

மேலும் படிக்க : வைகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' கோரிக்கை மனுக்கள் : மக்கள் அதிர்ச்சி

கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் :

அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை சமூக ஆர்வலர்கள் வன்மையாக கண்டித்து வருகின்றனர். எனவே இந்த சம்பவத்தில் தொடர்புடைய அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்” இவ்வாறு அண்ணாமலை கண்டனம்(Annamalai Condemns Stalin) தெரிவித்து இருக்கிறார்.

============