வைகையில் 'உங்களுடன் ஸ்டாலின்' கோரிக்கை மனுக்கள் : மக்கள் அதிர்ச்சி

Ungaludan Stalin Petition in Vaigai River : 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் திருப்புவனம் வைகை ஆற்றில் மூட்டையாக வீசப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
Ungaludan Stalin Scheme Petition in Vaigai River
Ungaludan Stalin Scheme Petition in Vaigai River
1 min read

'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் :

Ungaludan Stalin Petition in Vaigai River : தமிழகம் முழுவதும், திமுக அரசு சார்பில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இந்த முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என முதல்வர் ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். பொதுமக்களின் தங்கள் கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை அதிகாரிகளிடம் அளித்து விட்டு, தீர்வு கிடைத்து விடும் என்ற நம்பிக்கையுடன் காத்துக் கிடக்கின்றனர்.

வைகை ஆற்றில் கோரிக்கை மனுக்கள் :

இந்நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில் ' உங்களுடன் ஸ்டாலின் 'திட்ட முகாமில் பொதுமக்கள் வழங்கிய மனுக்கள் வீசப்பட்டு(Ungaludan Stalin Petition in Vaigai River) கிடந்தன. வட்டாட்சியர், வருவாய்த்துறை அதிகாரி, கிராம நிர்வாக அலுவலர் கையெழுத்துடன் கூடிய கோரிக்கை மனுக்கள் வைகை ஆற்றில் மூட்டையாக கட்டி வீசப்பட்டு இருந்தன.

ஆற்றில் வீசப்பட்ட மக்களின் மனுக்கள் :

பட்டா மாறுதல், பெயர் மாற்றம், ஸ்மார்ட் கார்டு வேண்டி வழங்கப்பட்ட மனுக்கள் ஆகியவை அதில் உள்ளன. திருப்புவனம், பூவந்தி, கீழடி, மடப்புரம், ஏனாதி, நெல் முடிக்கரையில் ஆகஸ்ட் 21, 22ம் தேதிகளில் இந்த மனுக்கள் பெறப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து, ஆற்றுப் பாலத்தின் கீழ் தண்ணீரில் கிடந்த மனுக்களை அதிகாரிகள் கைப்பற்றி கொண்டு சென்றனர்.

மேலும் படிக்க : அரசு திட்டங்களுக்கு முதல்வர் பெயர் கூடாது : உயர்நீதிமன்றம் அதிரடி

போலீசார் தீவிர விசாரணை :

மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை வைகை ஆற்றில் கொட்டிச் சென்றது யார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தச் சம்பவம் சமூக வலைதளத்தில் விவாதப் பொருளாகி இருக்கிறது. அரசு மீது மக்கள் நம்பிக்கை வைத்து, எழுதித் தரும் மனுக்களுக்கு இவ்வளவு தான் மரியாதா என்ற கேள்வியும் எழுந்து இருக்கிறது. பொதுமக்கள் அளித்த மனுக்களை ஆற்றில் வீசிய அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்துள்ளது.

=====

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in