Actor Unni Mukundan on PM Narendra Modi Biography Movie Maa Vande 
இந்தியா

நரேந்திர மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு: நடிகர் உன்னி முகுந்தன்

Actor Unni Mukundan on PM Narendra Modi Biography Movie Maa Vande : பிரதமர் மோடியாக நடிப்பது மிகப்பெரிய பொறுப்பு என்று, நடிகர் உன்னி முகுந்தன் நெகிழ்ச்சியோடு தெரிவித்துள்ளார்.

Kannan

நரேந்திர தாமோதர் தாஸ் மோடி :

PM Narendra Modi Biopic 'Maa Vande' Unveiled With Unni Mukundan : சாதாரண குடும்பத்தில் பிறந்து, ஆர்எஸ்எஸ் சேவகராக தனது அரசியல் பயணத்தை தொடங்கிய நரேந்திர தாமோதர் தாஸ் மோடி, பாஜகவில் முக்கிய பொறுப்புகளை வகித்து, குஜராத் முதல்வராக திறம்பட பணியாற்றினார். 2014ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தனிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறக் காரணமாக இருந்த அவர், தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராக பொறுப்பு வகித்து வருகிறார்.

‘மா வந்தே’ மோடியின் வாழ்க்கை வரலாறு :

உலகளவில் பெரிதும் மதிக்கப்படும் தலைவராக இருந்து வரும் பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை முன்வைத்து ‘மா வந்தே’ என்ற பெயரில் திரைப்படம் உருவாகிறது. பல்வேறு மொழிகளில் jஆன் இந்தியாவாக உருவாக்கப்படும் இப்படத்தில் பிரதமர் மோடியாக உன்னி முகுந்தன் நடிக்கவுள்ளார். பிரதமர் மோடியின் பிறந்த நாளான கடந்த 17ம் தேதி இப்படம் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது.

மோடியாக நடிப்பது எனது பெருமை :

உன்னி முகுந்தன்(Unni Mukundan) தனது பிறந்த நாளை முன்னிட்டு, பிரதமர் மோடியாக நடிக்கவிருப்பது குறித்து பேசியிருக்கிறார். “இந்திய பிரதமர் ஸ்ரீ நரேந்திர தாமோதரதாஸ் மோடி அவர்களாக 'மா வந்தே' படத்தில் நடிப்பது எனக்கு பெருமை. அகமதாபாத்தில் சிறுவனாக நான் வளர்ந்தபோது அவரை முதலமைச்சராக தான் தெரியும். அதன் பிறகு 2023ம் ஆண்டு அவரை நேரில் சந்தித்தது மறக்க முடியாத தருணம்.

மோடியாக நடிப்பது பெரிய பொறுப்பு :

மோடியாக திரைப்படத்தில் நடிப்பது வெறும் கதாபாத்திரம் அல்ல. பெரிய பொறுப்பு. எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்தவர் இந்திய தேசத்தின் வளர்ச்சிக்காக அனைத்தையும் தியாகம் செய்ததை பற்றி பேசும் இந்தக் கதைக்கு நியாயம் செய்வேன் என்று நம்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடிக்கும் அவரது மறைந்த தாயார் ஹீராபென் மோடிக்கும் இடையிலான உணர்வுப்பூர்வமான பிணைப்பை பிரதிபலிக்கும் வகையில் 'மா வந்தே' (அம்மா நான் உன்னை வணங்குகிறேன்)(Maa Vande in Tamil) எனப் படத்திற்கு தலைப்பிடப்பட்டுள்ளது. இதுவே படத்தின் மையக் கருவாக இருக்கும் என்று படக்குழுவினர் கூறியுள்ளனர்.

மேலும் படிக்க : Maa Vande : 'மா வந்தே' வாழ்க்கை வரலாறு : மோடியாக உன்னி முகுந்தன்

இந்தி, மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலம் என பான் 2026ம் ஆண்டு வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் தயாரிப்பு பணிகள் விரைவில் தொடங்குகிறது.

==================