Maa Vande : 'மா வந்தே' வாழ்க்கை வரலாறு : மோடியாக உன்னி முகுந்தன்

PM Narendra Modi Biography Movie Maa Vande : பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாறு ‘மா வந்தே’ என்ற பெயரில் திரைப்படமாக வெளியாகிறது. அவரது பாத்திரத்தில் உன்னி முகுந்தன் நடிக்கிறார்.
PM Narendra Modi Biography Movie Maa Vande in Tamil
PM Narendra Modi Biography Movie Maa Vande in Tamil
1 min read

மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் :

PM Narendra Modi Biography Movie Maa Vande : பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை சமூக ஊடகங்களிலும், நேரிலும் தெரிவித்து வருகின்றனர். இதனிடையே, பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாறு திரைப்படாமாக உருவாக இருக்கிறது என தகவல்கள் வலம் வந்த வண்ணம் இருந்த நிலையில். பிறந்தநாளான இன்று அது உறுதிப்படுத்தப்பட்டு இருக்கிறது.

’மா வந்தே’ - உன்னி முகுந்தன்:

மோடியின் வாழ்க்கையை திரைப்படமாக சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்க இருக்கும் நிலையில், பிரபல இசையமைப்பாளரான ரவி பஸ்ரூர் இசையமைக்கிறார். இப்படத்திற்கு 'மா வந்தே'(Maa Vande) என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், நரேந்திர மோடியின் கதாபாத்திரத்தில் நடிகர் உன்னி முகுந்தன்(Unni Mukundan) நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மோடியுடன் உன்னி முகுந்தன் :

இந்த திரைப்படம்(PM Narendra Modi Biopic), நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் இதயங்களை வென்ற நரேந்திர மோடியின் அற்புதமான வாழ்க்கைப் பயணத்தைச் சித்தரிக்கும் நிலையில் உருவாக உள்ளது. இதுகுறித்து நரேந்திர மோடி மற்றும் கதையின் நாயகனாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள உன்னி முகுந்தன் ஆகிய இருவரும் கலந்துரையாடும் புகைப்படமும் சமூக வலைதளங்களில்(Unni Mukundan with PM Modi) வைரலாகி வருகிறது.

பான் இந்தியா படமாக ‘மா வந்தே’ :

சர்வதேச தரத்திலும், அற்புதமான VFX தொழில்நுட்பங்களுடனும், இந்தியாவின் முன்னணி நுட்ப நிபுணர்களின் பங்களிப்புடனும் இந்தப் படம்(Maa Vande) உருவாக்கப்படுகிறது எனவும் பான்-இந்தியா அளவில் இந்திய மொழிகள் அனைத்திலும் வெளியீடு செய்யப்படுவதோடு, ஆங்கிலத்திலும் தயாரிக்கப்படுகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க : Modi 75 : பிரதமர் மோடி பிறந்தநாள் : ஸ்டாலின், EPS, OPS வாழ்த்து

ஹீரா பென்னாக நடிப்பது யார்? :

கிராந்தி குமாரின் எழுத்து மற்றும் இயக்கத்தில் உருவாகவுள்ள இந்த படத்தின் முக்கிய கரு மற்றும் கதாபாத்திரமாக பிரதமர் மோடி அவர்களுக்கு எப்போதும் ஆதரவாக இருந்த தாயார் ஸ்ரீமதி ஹீராபென் மோடி(Heeraben Modi) அவர்களுடனான ஆழமான பந்தத்தை வெளிப்படுத்த உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் பிரதமர் மோடியின் தாயாராக யார் நடிக்க இருக்கிறார் என்று நெட்டிசன்கள் பலரும் சமூக வலைதங்களில் தங்களது கேள்வி மற்றும் கருத்துகளை எழுப்பி வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in