BJP Leaders L Murugan Nainar Nagendran Remember Vande Mataram Song 150th Year Celebration Google
இந்தியா

வந்தே மாதரம் பாடல் நினைவுகூறல் - அரசியல் தலைவர்கள் பதிவு!

BJP Leaders Remember Vande Mataram Song 150th Year : பங்கிம் சந்தர் சட்டர்ஜி நவம்பர் 7 அன்று இயற்றிய வந்தே மாதரம் பாடல் குறித்து அரசியல் கட்சி தலைவர்கள் நினைவுகூர்ந்து பதிவு வெளியிட்டுள்ளனர்.

Bala Murugan

எல்.முருகன் அறிக்கை

BJP Leaders Remember Vande Mataram Song 150th Year : இதுகுறித்து மத்திய அமைச்சர் எல்.முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 1896ஆம் ஆண்டு வந்தே மாதரம் பாடலை வங்க கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் இசையமைத்து பாடியதாகவும், அதன் பிறகு வந்தே மாதரம் தேசிய பாடலாக விடுதலை போரின் உணர்ச்சி முழக்கமாக நாடு முழுவதும் எதிரொலித்தாகவும் தெரிவித்துள்ளார்.

வந்தே மாதரம் பாடலை அனைவரும் பாடுவோம்

மேலும் வந்தே மாதரம் குறித்த உணர்ச்சி ததும்பும் பாடலை தமிழகத்தின் தெருவெல்லாம் மகாகவி பாரதியார் முழுங்க செய்தார் எனவும் பாரத நாட்டின் ஒற்றுமை உணர்ச்சியை வெளிப்படுத்தும் வந்தே மாதரம் பாடல் இயற்றபட்டு 150வது ஆண்டு நமக்கு உவகையை ஏற்படுத்தியுள்ளதாக கூறியுள்ள அவர், வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவை நாட்டு மக்கள் கொண்டாட வேண்டும் என பிரதமர் மோடி கேட்டு கொண்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.மேலும், வந்தே மாதரம் என்ற போர் வெற்றி முழக்க பாடலை நாம் அனைவரும் ஒன்றுக்கூடி பாடுவோம் என மத்திய அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

நயினார் நாகேந்திரன் பதிவு

இவரைத்தொடர்ந்து, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் விடுத்துள்ள பதிவில், இந்திய சுதந்திர இயக்கத்திற்கு ஊக்கமளித்து நாட்டின் பெருமையையும், ஒற்றுமையையும் தூண்டிய வந்தே மாதரம் பாடலின் 150-வது ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. 1875-ஆம் ஆண்டு நவம்பர் 7-ல் அட்சய நவமி நாளில், வங்க கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய இந்த பாடல் , சுதந்திரப் போராட்டத்தின் போது ஒட்டுமொத்த இந்தியர்களின் மனங்களில் வீரத்தை விதைக்கும் வண்ணம் அமைந்ததாக தெரிவித்துள்ளார்.

ஒரு தாய் பிள்ளைகள் என உணர்த்துகிறது

இந்நாளில் சுதந்திர தாய்நாட்டின் தேசிய உணர்வு, ஒற்றுமை, மொழி, பண்பாடு, கலாச்சாரம் ஆகியவற்றை நினைவு கூர்ந்து வணங்குவோம் என்றும் அவர் கூறியுள்ளார்.வந்தே மாதரம் பாடல் சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்களையும், இந்தியராகிய‌ நாம் அனைவரும் ஒரு தாய் பிள்ளைகள் என்று இன்றுவரை நமக்கு உணர்த்துகிறது. இந்த நாளில் நமது இந்திய தேசத்தின் மக்கள் அனைத்து வளங்களையும் பெற்று மனமகிழ்வு அடையட்டும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.