’வந்தே மாதரம்’ 150வது ஆண்டு : தபால் தலை, நாணயம் வெளியீடு

Vande Mataram 150th Years Celebration 2025 Special Postage Stamp : வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் மோடி வெளியிட்டார்.
PM Modi released special postage stamp, coin to mark 150th anniversary of Vande Mataram song
PM Modi released special postage stamp, coin to mark 150th anniversary of Vande Mataram songANI
2 min read

வந்தே மாதரம் பாடல் :

Vande Mataram 150th Years Celebration 2025 Special Postage Stamp : வங்கக் கவிஞர் பங்கிம் சந்திர சட்டர்ஜி, 'வந்தே மாதரம்' பாடலை, 1875ம் ஆண்டு நவம்பர் 7ல் அட்சய நவமி நாளில் எழுதினார். சுதந்திர போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய இந்த பாடல், 'ஆனந்த மடம்' என்ற புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.

150 ஆண்டுகளை கடந்த வந்தே மாதரம்

இந்தப் பாடல் நமது தாய்நாட்டை வலிமை, செழிப்பு மற்றும் தெய்வீகத்தின் அடையாளமாகக் கொண்டாடப்படுகிறது. 150 ஆண்டுகளை(Vande Mataram 150) கடந்த பிறகும், வந்தே மாதரம் இன்றும் தேசப் பெருமையைத் தூண்டி, நம் தேசத்தை உணர்வுடனும் மன உறுதியுடனும் ஒன்றிணைக்கிறது.

வந்தே மாதரம் - ஓராண்டு கொண்டாட்டம்

இந்நிலையில் வந்தே மாதரம் பாடல் எழுதப்பட்டு, 150 ஆண்டு நிறைவடைவதை கொண்டாடும் வகையில் நாடு முழுவதும் இசை, கலை நிகழ்ச்சிகளை மத்திய கலாசார அமைச்சகம் நடத்துகிறது. இந்த நிகழ்வானது இன்று (நவம்பர் 07) துவங்கி 2026ம் ஆண்டு நவம்பர் 7ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.

நவம்பர் 14 வரை முதல் கட்டமாகவும், குடியரசு தினத்தையொட்டி 2026 ஜனவரி 19 - 26 வரை இரண்டாம் கட்டமாகவும், 2026 ஆகஸ்டு 7 - 15 வரை மூன்றாம் கட்டமாகவும், பின்னர் 2026 நவம்பர் 1-7 வரை கலை மற்றும் இசை நிகழ்ச்சிகள் நடத்தி கொண்டாட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு இருக்கிறது.

சிறப்பு தபால் தலை, நாணயம்

இதையொட்டி, டெல்லியில் இன்று சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்திரா காந்தி உள்விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தலைமை விருந்தினராக பங்கேற்றார். வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு தபால் தலை, நாணயத்தை பிரதமர் வெளியிட்டார். நிகழ்ச்சியில் வந்தே மாதரம் பாடல் பாடப்பட்டது.

பிரதமர் மோடி வாழ்த்து

முன்னதாக, சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ”இன்று நவம்பர் 7ம் தேதி, நம் நாட்டு மக்களுக்கு ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நாளாக இருக்கும். நம் நாட்டின் தலைமுறையினரை தேசபக்தி உணர்வால் ஊக்கமளிக்கும் வந்தே மாதரம் பாடலின் 150வது ஆண்டு நிறைவை நாம் கொண்டாடுவோம்” என்று தெரிவித்துள்ளார்.

தமிழ் மொழியில் வந்தே மாதரம் பாடல்

வந்தே மாதரம்

ஸுஜலாம் ஸுபலாம் மலயஜ ஶீதலாம்,

ஶஸ்ய ஶ்யாமலாம் மாதரம்

வந்தே மாதரம்

ஶுப்ர ஜ்யோத்ஸ்னா புலகித யாமினீம்,

ஃபுல்ல குஸுமித த்ரும தல ஶோபிநீம்,

ஸுஹாஸினீம் ஸுமதுர பாஷிணீம்,

ஸுகதாம் வரதாம் மாதரம்

வந்தே மாதரம்

கோடி கோடி கண்ட கல்கல நிநாத கராலே,

கோடி கோடி புஜைர்த்ருத கரகரவாலே,

கே போலே மா துமி அபலே,

பஹுபல தாரிணீம் நமாமி தாரிணீம்,

ரிபுதல வாரிணீம் மாதரம்

வந்தே மாதரம்

துமி வித்யா துமி தர்ம,

துமி ஹ்ருதி துமி மர்ம,

த்வம் ஹி பிராணா ஶரீரே,

பாஹுதே துமி மா சக்தி,

ஹ்ருதயே துமி மா பக்தி,

தோமாரை பிரதிமா கடி மந்திரே மந்திரே

வந்தே மாதரம்

த்வம் ஹி துர்கா தஶ ப்ரஹரண தாரிணீ,

கமலா கமல தல விஹாரிணீ,

வாணீ வித்யா தாயிநீ நமாமி த்வாம்,

நமாமி கமலாமமலாமதுலாம்,

ஸுஜலாம் ஸுபலாம் மாதரம்

வந்தே மாதரம்

ஷ்யாமலாம் ஸரலாம் ஸுஸ்மிதாம் பூஷிதாம்,

தரணீம் பரணீம் மாதரம்

வந்தே மாதரம்

======

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in