சிபிஎஸ்இ அதிரடி உத்தரவு :
CBSE School Attendance Rules 2025 : மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் என்று அழைக்கப்படக் கூடிய சிபிஎஸ்இ நிர்வாகம், தன்னுடைய நிர்வாகத்தின் கீழ் செயல்படும் அனைத்துப் பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
75% வருகைப் பதிவேடு கட்டாயம் :
10, 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளுக்கு தகுதி பெற குறைந்தபட்சம் பள்ளிகளில் 75 சதவீத வருகைப் பதிவு கட்டாயம்(75% Attendance Mandatory in CBSE 10th 12th Exam) என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவ அவசரநிலை, தேசிய அல்லது சர்வதேச விளையாட்டு நிகழ்வுகளில் பங்கேற்பது, பிற தீவிர காரணங்களுக்காக செல்வது போன்றவற்றுக்கான ஆவணங்கள் இருந்தால் 25 சதவீத தளர்வு வழங்கப்படும்.
வழிகாட்டுதல் நெறிமுறைகள் :
வருகைப் பதிவேட்டை அனைத்துப் பள்ளிகளும் முறையாக பின்பற்ற வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. பள்ளிகளை திடீரென்று ஆய்வு மேற்கொள்ளும் போது முறையான விடுப்பு பதிவுகள் இல்லாமல் இருப்பதை கண்டறிந்தால், அந்த மாணவர் பள்ளிக்கு வராதவர், போலியானவர் எனக் கருதப்படுவார்கள். அவர்கள் பொதுத் தேர்வுகளில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
மேலும் படிக்க : உயர்கல்வியை சீரமைக்க நடவடிக்கை : அரசுக்கு பாலகுருசாமி வேண்டுகோள்
பள்ளிகளுக்கு உரிய அறிவுறுத்தல் :
வருகைப் பதிவுகளை முறையாகப் பராமரிக்காத பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாணவர்கள் அடிக்கடி பள்ளிக்கு வராமல் இருந்தால் அது குறித்த தகவலை பெற்றோருக்கு முறையாகத் தெரிவிக்க வேண்டும் என்றும் மத்திய இடைநிலைக் கல்வி வாரியம்(Central Board of Secondary Education) தெரிவித்துள்ளது.
=========