இந்தியாவில் தங்கம் புழக்கம் :
9K Carat Gold Sales in India : உலக அளவில் தங்கத்தின் பயன்பாடு அதிகம் உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. நாட்டின் சேமிப்பு என்ற அளவில் மட்டுமின்றி, பொதுமக்கள் வருங்கால பாதுகாப்பான முதலீடு என்ற வகையில், தங்க நகைகள், காசுகளை வாங்கி பயன்படுத்துகின்றனர். எனவே, ஆண்டு தோறும் இந்தியா மக்களை தேவையை பூர்த்தி செய்யும் வகையில் 600 முதல் 800 டன் தங்கத்தை இறக்குமதி செய்கிறது.
கேரட்களில் தங்கம் தர நிர்ணயம் :
14K, 18K, 20K, 22K, 23K மற்றும் 24K என்ற தங்கத்தின் தரம் நிர்ணயிக்கப்பட்டு, அதற்கேற்ற வகையில் விற்பனை செய்யப்படுகிறது. ஆபரணங்கள் செய்ய பயன்படுத்தப்படும் தங்கத்தின் விலை 74 ஆயிரத்திற்கு அதிகமாக உள்ளது. எனவே, அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் தங்கம் வாங்கும் வகையில் 9 கேரட் தங்கம்(9 Carat Gold Sales) விற்பனைக்கு வருகிறது.
9 கேரட் தங்கம் விற்பனை :
24 கேரட் தங்கம் என்பது 99.9 சதவீதம் தூய தங்கம். அதாவது அதில் வேறு உலோகங்கள் எதுவும் கலக்கப்படுவதில்லை. அதேநேரம் 22 கேரட் தங்கம் என்பதில் 22 பங்கு தங்கமும் 2 பங்கு இதர உலோகமும் இருக்கும். இது பொதுவாக 91.6% தங்கம் இருக்கும். மறுபுறம் 9 கேரட் தங்கம் என்பது 37.5 சதவீதம் தங்கமாகும். இதில் 24 பங்குகளில் 9 பங்கு மட்டுமே தங்கம் இருக்கும். இதர 15 பங்குகள் வேறு உலோகங்கள் இருக்கும். அதாவது மீதமுள்ள 62.5 சதவீதம் தாமிரம், வெள்ளி அல்லது ஜின்க் போன்ற கலப்பு உலோகங்கள் இருக்கும்.
குறைந்த விலையில் தங்கம் :
தங்கம் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் சூழலில் பலரும் குறைந்த விலையில் வேறு வாய்ப்பு இருக்கிறதா என்று பார்க்கிறார்கள். அவர்களுக்கு இந்த 9 கேரட் தங்கம் ஏற்றதாக இருக்கிறது. அதாவது குறைந்த பட்ஜெட் கொண்டவர்களுக்கு இது ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கும். இந்தச் சூழலில் ஹால்மார்க்கிங் திட்டத்தில் 9 கேரட் தங்கம்(Hallmark 9 Carat Gold) சேர்க்கப்பட்டதால், அதன் நம்பகத்தன்மை மேலும் அதிகரித்துள்ளது. நாடு முழுக்க 9 கேரட் தங்கத்தின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஹால் மார்க் முத்திரையுடன் 9 கேரட் தங்கம் :
நகைக் கடைக்காரர்களும் 9 கேரட் தங்கத்தை அதிகம் விற்பார்கள். மேலும், 22 கேரட் அல்லது 18 கேரட் தங்கத்தை விட நீடித்து உழைக்கும் என்பதால், அன்றாடம் பயன்படுத்தும் மோதிரங்கள், வளையல் நகைகளுக்கு இது ஏற்றதாக இருக்கும்.
மேலும் படிக்க : உச்சம் தொட்ட வெள்ளி விலை : ஒரு கிராம் ரூ.130, கிலொ ரூ.1.30.000
9 கேரட் ஒரு கிராம் ரூ.3.700 :
24 கேரட் தங்கம் இப்போது ஒரு கிராம் ரூ.10,000ஐ தாண்டிவிட்டது. இருப்பினும், 9 கேரட் தங்கம் கிராமுக்கு சுமார் ரூ.3,700க்கே விற்கப்படுகிறது(9 Carat Gold Price Today 1 Gram). அடுத்து பண்டிகை சீசன் நெருங்கி வருவதால், 9 கேரட் தங்கத்திற்கு ஹால்மார்க்கிங் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் இனி 9 கேரட் தங்கத்தை வாங்க அதிக ஆர்வம் காட்டுவார்கள் எனத் தெரிகிறது.
================