
தங்கம் விலை மீண்டும் அதிகரிப்பு :
Today Gold Silver Rate in Chennai : கடந்த 10 நாட்களாக தங்கம் விலை ஏற்றம் காணாமல் படிப்படியாக குறைந்து வந்தது. ஒரு சவரன் 75 ஆயிரத்திற்கு கீழ் குறைந்தது. இதனால் பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த நிலையில் தங்கம் விலை(Gold Price) மீண்டும் உயர்ந்து இருக்கிறது.
ஒரு கிராம் ரூ.9.315, சவரன் ரூ. 74,520 :
நேற்றைய தினம் ஒரு கிராம் தங்கம் 15 ரூபாய் விலை குறைந்து 9,215 ரூபாய்க்கும் ஒரு சவரன் 73 20 ரூபாய்க்கு விற்பனை(Gold Price Update) செய்யப்பட்டது. வாரக் கடைசி நாளான இன்று, ஒரு கிராம் 9, 315 ரூபாய் என கிராமுக்கு 100 ரூபாய் விலை உயர்ந்திருக்கிறது. ஒரு சவரன் தங்கத்தை பொறுத்தவரை 800 ரூபாய் விலை உயர்ந்து 74 ,520 ரூபாய் என விற்கப்படுகிறது. மீண்டும் தங்கத்தின் விலை 74 ,000 ரூபாயை கடந்து இருப்பது வாடிக்கையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்குறது.
24 கேரட் சவரன் ரூ. 81,292 :
24 கேரட் தங்கத்தை(24 Carat Gold Rate Today) பொருத்தவரை நேற்று ஒரு கிராம் 10,053 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று அது 10,162 ரூபாய் என ஒரு கிராமுக்கு 109 ரூபாய் விலை உயர்ந்துள்ளது. ஒரு சவரன் 81,292 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மேலும் படிக்க : Gold Rate : சவரனுக்கு ரூ.1360 : ஒரு வாரத்தில் குறைந்த தங்கம் விலை
புதிய உச்சத்தில் வெள்ளி விலை :
தங்கத்திற்கு நிகராக வெள்ளியின் விலையும் உயர்வு(Silver Price Hike Today) கண்டு, புதிய உச்சசத்தை தொட்டுள்ளது. நேற்றை விட இன்றைய தினம் வெள்ளி ஒரு கிராமுக்கு 2 ரூபாய் உயர்ந்திருக்கிறது. அதன்படி, ஒரு கிராம் வெள்ளி 130 ரூபாய்க்கும்(1 Gram Silver Rate Today) ஒரு கிலோ வெள்ளி 2,000 ரூபாய் விலை உயர்ந்து 1,30,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டாலர் வலுவிழந்து வருவதும் தங்கம் விலை உயர்வுக்கு காரணமாக உள்ளது. எதிர்வரும் நாட்களிலும் தங்கம்,வெள்ளி விலை ஏறுமுகத்தில் செல்லும் என்று பொருளாதார வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
========