நாய்க்கடியால் பாதிப்பு, பிரச்சினைகள் :
Central Health Ministry Advice To Street Dog Bite Victims : நாய்க்கடி பாதிப்பு இந்தியா முழுவதுமே பெரிய அளவில் பிரச்சினைகளை ஏற்படுத்தி வருகிறது. நாய்களை கட்டுப்படுத்த வேண்டும், அவைகளை கொல்லக்கூடாது என புளூகிராஸ் போன்ற அமைப்புகளும், விலங்கின ஆர்வலர்களும் போராடி வருகிறார்கள். மறுபக்கம், பாதிக்கப்படும் மக்கள் தங்களுக்கு என்ன நியாயம் கிடைக்கும் என்று குமுறுகின்றனர். உச்சநீதிமன்றம் வரை இது தொடர்பான வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்ட மாநிலங்களுக்கு உரிய உத்தரவுகள் பிறக்கப்படுகின்றன.
இந்தியாவில் கடந்த ஆண்டு மட்டும், 22 லட்சத்திற்கும் மேற்பட்டோர் நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் நான்கில் ஒரு பகுதியினர் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமியர் என்ற புள்ளி விவரம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தல் :
இந்த நிலையில், நாய் கடியால்(Dog Bite Issue) பாதிக்கப்பட்டவர்கள் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து மத்திய சுகாதாரத்துறை உரிய நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. ரேபிஸ் வராமலிருக்க என்னென்ன செய்யவேண்டும் என்பது குறித்து அதில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய சுகாதாரத்துறை வழிகாட்டி நெறிமுறைகள் :
1. நாய் கடித்த காயத்தை உடனடியாக சோப்பு அல்லது சுத்தமான ஓடும் நீரில் கழுவ வேண்டும்.
2. ஆல்கஹால் அல்லது வீட்டில் உள்ள கிருமிநாசினியை பயன்படுத்தி நாய் கடித்த இடத்தை நன்றாக கழுவ வேண்டும்.
3. வீட்டில் வளர்க்கக்கூடிய செல்ல பிராணிகள் நாய், பூனை என பிற விலங்குகளாக இருந்தாலும் சரியான நேரத்தில் அவற்றுக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.
4. நாய் கடியால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவரின் அறிவுரையின்படி ரேபிஸ் தடுப்பூசி உட்பட அனைத்து தவணை தடுப்பூசிகளையும் தவறாமல் செலுத்திக் கொள்ள வேண்டும்.
5 நாய் கடியால் மூட நம்பிகைக்கையாக கருதாமல், கடித்த பகுதியில் மிளகாய், கடுகு எண்ணெய் போன்றவற்றை தடவக் கூடாது.
6. யூடியூப் , இன்ஸ்டாகிராமை பார்த்து சுய மருத்துவம் மேற்கொள்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும்.
7. நாய் கடித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் அல்லது அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.
மேலும் படிக்க : தெருநாய்களுக்கு ரேபீஸ் தடுப்பூசி : முழுமையாக செயல்படுத்திய சிம்லா
தமிழகத்தில் இதுவரை 3 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் இந்த ஆண்டு நாய்க்கடியால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இந்தச் சூழ்நிலையில் ரேபிஸ் நோய் வராமல் இருக்க பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டு இருப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டுமின்றி, பொதுமக்கள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.
===================