ஆந்திராவில் நலத்திட்டங்கள் :
Free Sand Announced in Andhra Pradesh : ஆந்திராவில் சந்திரபாபு நாயுடு தலைமையில் தெலுங்கு தேசம் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, தேர்தலின் போது அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அடிப்படையில், மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
வீடு கட்ட மணல் இலவசம் :
இந்தநிலையில், வீடு கட்டுவதற்கான மணல் இலவசமாக வழங்கப்படும் என்று, முதல்வர் சந்திரபாபு நாயுடு அறிவித்துள்ளார். அதன்படி ஆந்திரா அரசு "இலவச மணல் கொள்கை"யை (Free Sand Policy) செயல்படுத்தியுள்ளது. அதன்படி, கட்டுமானத்திற்கான மணல் (sand) இலவசமாக கிடைக்கும். போக்குவரத்து கட்டணம் இல்லாமல். குறிப்பாக ஏழை மக்களுக்கான வீட்டு கட்டுமானத்தை ஊக்குவிக்கும் நோக்கத்தில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
மணல் விலை உயர்வு தடுக்கப்படும் :
மணல் விலை உயர்வு மற்றும் குறைபாட்டைத் தடுக்க, கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் ஏழை குடும்பங்களுக்கு எளிதாக மணல் கிடைக்கச் செய்யும். இலவசமாக மணலை பெற, ஆன்லைன் மூலம் புக் செய்யலாம்(Free Sand Online Booking in AP). இதற்காக ஆந்திரா அரசின் இலவச மணல் புக் செய்யும் அமைப்பு அண்மையில் தொடங்கப்பட்டது. டிராக்டர்கள் மூலம் தனிப்பட்ட பயன்பாட்டிற்கு இலவசமாக அருகிலுள்ள ஆற்றங்கரைகளிலிருந்து ஊராட்சி அளவிலான தேவைக்கு இலவசமாக எடுக்கலாம்.
ஏழைகளுக்கு போதிய மணல் :
எந்தவொரு கட்டுப்பாடும் இன்றி, வீடு கட்டும் அனைவருக்கும் (குறிப்பாக ஏழைகளுக்கு) கிடைக்கும். ஆனால், சட்டப்படி அனுமதி பெற வேண்டும்.
மேலும் படிக்க : திருப்பதி பிரம்மோற்சவம் : கூட்ட நெரிசலை சமாளிக்க AI தொழில்நுட்பம்
பிரதமர் வீட்டு திட்டம் (PMAY) கீழ், ஆந்திராவில் ஏழை குடும்பங்களுக்கு வீடு கட்டுவதற்கு ரூ.2.5 லட்சம் வரை மானியம் (subsidy) கிடைக்கிறது. இதில் மணலுக்கான செலவு குறையும்.
==========
r