Rajnath Singh inaugurates Army Armoured Vehicle Manufacturing Plant in Morocco 
இந்தியா

ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலையை திறந்து வைத்த ராஜ்நாத் சிங்..!

Rajnath Singh: மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்​நாத் சிங் வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை நேற்று திறந்து வைத்​தார்.

Bala Murugan

பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களின் முன்னெடுப்பு :

Rajnath Singh Opens First Defence Plant in Morocco : மத்திய அரசு சார்பில் இந்தியாவிற்கு பல்வேறு நன்மைகள் நிகழ்ந்து வரும் நிலையில், பிரதமர் முதல் மத்திய பல்துறை அமைச்சர்கள் வரை நாட்டிற்காக தங்களது முனைப்பை காட்டி பல புதுவித முயற்சிகளை தொடுத்து வருகின்றனர். அதில் இந்தியாவின் பாதுகாப்பு குறித்து பலதரப்பில் கேள்விகள் எழுந்தாலும், இன்று இந்தியா ஒரு பாதுகாப்பு நாடு என்பதில் எந்த ஒரு ஐயமும் இல்லை என்று சமூக ஆர்வலர்கள் பலரும் தங்களது கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்திய தனியார் நிறுவன ராணுவ கவச வாகன உற்பத்தி ஆலை திறப்பு :

மத்திய பாதுகாப்பு துறை அமைச்சரான ராஜ்​நாத் சிங் வட ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் இந்​திய தனி​யார் துறை சார்​பில் முதல் ராணுவ கவச வாகன உற்​பத்தி ஆலையை நேற்று திறந்து வைத்​தார். இதற்​கான விழா​வில், மொ​ராக்​கோ பாது​காப்பு அமைச்​சர் அப்​தெலதீப் லவுடி உள்ளிட்ட பலர் பங்​கேற்​றனர். டாடா அட்​வான்​ஸ்டு சிஸ்​டம்ஸ் டிஆர்​டிஓ உடன் இணைந்து மொ​ராக்​கோ​வில் உள்ள காசாபிளாங்கா​வுக்கு அருகே ராணுவ கவச வாக​னங்​களுக்​கான (டபிள்​யூஎச்​ஏபி 8x8) நவீன பாது​காப்பு உற்​பத்தி ஆலையை அமைத்​து செயல்படுத்த தொடங்கியுள்ளது.

ராஜ்​நாத் சிங் பேச்சு

இதுகுறித்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ராஜ்​நாத் சிங் பேசுகையில், “தற்​சார்பு இந்​தி​யா​வின் தொலைநோக்கு பார்​வை, உள்​நாட்டு தேவை​களுக்​காக மட்​டும் பொருட்​களை உற்​பத்தி செய்​வது அல்ல. மாறாக உயர்​தர​மான நவீன தொழில்​நுட்ப வசதி​களைக் கொண்ட உறு​தி​யான பொருட்​களை உலக நாடு​களுக்​காக தயாரித்து வழங்​கு​வதும் தற்​சார்பு இந்​தி​யா​வின் முக்​கிய நோக்​கம் ஆகும். அதனை பின்​பற்​றியே ஆப்​பிரிக்க நாடான மொ​ராக்​கோ​வில் பாது​காப்பு தளவாட தொழிற்​சாலை இந்​திய நிறு​வனத்​தின் சார்​பில் அமைக்​கப்​பட்​டுள்​ளது எனவும்இந்​தி​யா​வைப் பொறுத்​தவரை தற்​சார்பு என்​பது தனிமைப்​படுத்​தலைக் குறிக்​காது. மாறாக பிற நாடு​களைச் சார்ந்து இருக்​காமல் அல்​லது அவற்​றின் தேவையற்ற செல்​வாக்​குக்கு உட்​ப​டா​மல் தேசிய நலன்​களின் அடிப்​படை​யில் இறை​யாண்மை உள்ள முடிவு​களை எடுத்து செயல்​படுத்​தும் திறன்​களை உரு​வாக்​கு​வ​தாகும் என்று தெரிவித்தார்.

மேலும் படிக்க : ரயிலில் இருந்து ’Agni-Prime Missile’ : சாதித்து காட்டிய இந்தியா

மேலும் பேசிய அவர், மேக் இன் இந்​தியா உடன் மேக் வித் பிரெண்ட்ஸ் & மேக் பார் வேர்ல்ட் ஆகிய​வற்றை நாங்​கள் பின்​பற்​றுகிறோம். ஐரோப்​பி​யா​வு்க்​கான நுழைவு வாயி​லாக மொ​ராக்​கோ உள்​ளது’’ என்​றார். மொ​ராக்​கோ​வில் 20,000 சதுர மீட்​டரில் அமைந்​துள்ள டாடா அட்​வான்​ஸ்டு சிஸ்​டத்​தின் பாது​காப்பு ஆலை(Army Armoured Vehicle Manufacturing Plant in Morocco) அடுத்த மாதம் முதல் ராயல் மொ​ராக்​கோ ராணுவத்​துக்கு தேவை​யான ராணுவ கவச வாக​னங்​களை தயாரித்​து வழங்​க தொடங்​கும்​ என்று தெரிவித்துள்ளார்.