
அக்னி ஏவுகணைகள் :
India Successfully Test Agni Prime Missile : கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வெற்றிகரமாக தயாரித்து வரும் இந்தியா, அவற்றை முப்படைகளிலும் பயன்படுத்தி வருகிறது. அவற்றில் முக்கியமானது அக்னி ஏவுகணை ஆகும். உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த ஏவுகணைகள் 2011ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் இருக்கின்றன. அக்னி ஏவுகணைகளில் பல வகைகள் உள்ளன.ஒருசில வகை ஏவுகணைகள், 3,500 முதல் 5,000 கி.மீ வரை சென்று தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணையின் சிறப்பம்சம், எங்கு வேண்டும் என்றாலும் கொண்டு சென்று, அங்கிருந்து ஏவ முடியும் .
அக்னி ஏவுகணையின் தாக்குதல் தன்மை மிகவும் துல்லியமாக இருக்கும். இதில் அணு குண்டுகளையும் பயன்படுத்த முடியும். பாகிஸ்தானுடன் மோதல் அதிகரித்து இருக்கும் சூழலில், இத்தகைய ஏவுகணைகள் நமது பாதுகாப்பு படைகளுக்கு கூடுதல் வலிமையை அளித்து வருகின்றன.
ரயிலில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை :
2 ஆயிரம் கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை தாக்கும் வல்லமை படைத்த அக்னி பிரைம் ஏவுகணையை, டிஆர்டிஓ எனப்படும் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு வடிவமைத்து இருக்கிறது. இந்த ஏவுகணை முதன்முறையாக ரயிலில் அமைக்கப்பட்டு இருந்த மொபைல் லாஞ்சர் மூலம் ஏவப்பட்டது. சிறப்பாக ரயிலில் அமைக்கப்பட்டு இருந்து ஏவுதளத்தில் இருந்து அக்னி பிரைம் ஏவுகணை விண்ணில் சீறிப் பாய்ந்தது.
விஞ்ஞானிகளுக்கு ராஜ்நாத் பாராட்டு :
வெற்றிகரமாக அக்னி பிரைம் ஏவுகணை'ஐ சோதனை செய்த டிஆர்டிஓ(DRDO) விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார். இது குறித்து சமூக வலைதளத்தில் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து அக்னி ஏவுகணை சோதனை நிகழ்த்தப்பட்டது. இந்த ஏவுகணை 2,000 கிமீ வரை சென்று தாக்கும் திறனுடன் வடிவமைக்கப்பட்டு, பல்வேறு அம்சங்களைக் கொண்டுள்ளது. சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து இன்று மேற்கொள்ளப்பட்ட முதல் ஏவுகணை சோதனை(Agni Prime Missile Rail Based Mobile Launcher) சிறப்பாக செய்யப்பட்டது. இந்த முயற்சியில் ஈடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள். இந்த வெற்றிகரமான சோதனை இந்தியாவை ரயில் மீதான மொபைல் லாஞ்சரிலிருந்து ஏவுகணைகள் ஏவும் திறன் கொண்ட நாடாக மாற்றி உள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க : Mizoram : 8,070 கோடியில் ரயில் பாதை : அர்ப்பணித்தார் பிரதமர் மோடி
எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லலாம்
ரயில் மீது இருந்து ஏவுகணையை(Agni Prime Missile Test) செலுத்தும் திறன் மூலம், நாட்டின் எந்தப் பகுதிக்கும் மிக விரைவாக அக்னி ஏவுகணையை கொண்டு சென்று பயன்படுத்த முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
==========