Delhi Court Notice to Priyanka Gandhi's Husband Robert Vadra On Money Laundering Case 
இந்தியா

பணமோசடி வழக்கில் நோட்டீஸ் : ராபர்ட் வதேராவுக்கு சிக்கல்

Delhi Court Notice To Robert Vadra : பணமோசடி வழக்கில் வரும் 28ம் தேதி நேரில் ஆஜராகுமாறு, பிரியங்காவின் கணவர் ராபர்ட் வதேராவுக்கு டெல்லி நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது.

Kannan

ராபர்ட் வதேராவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை :

Delhi Court Notice To Robert Vadra Case : சோனியா காந்தியின் மருமகனும், பிரியங்கா காந்தியின் கணவருமான ராபர்ட் வதேரா பெரும் தொழிலதிபர் ஆவார். பண மோசடி வழக்கில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. கடந்த மூன்று மாதங்களில் சோனியா குடும்பத்தினர் மீது தாக்கல் செய்யப்படும் 2வது குற்றப்பத்திரிகை இதுவாகும். அதில் ராபர்ட் வதேரா உள்பட 10 பேரின் பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. மேலும், அவருக்கு சொந்தமான ரூ.37.64 கோடி மதிப்பிலான 43 அசையா சொத்துக்களை அமலாக்கத்துறை பறிமுதல் செய்தது.

ராபர்ட் வதேரா ஆஜராக உத்தரவு :

இந்த வழக்கை, அமலாக்கத்துறை அதிகாரிகள்(ED Officials) தீவிரமாக விசாரணை நடத்தினர். அதன் அடிப்படையில், குற்றம் சாட்டப்பட்டு உள்ள ராபர்ட் வதேராவுக்கு ஆகஸ்ட் 28ம் தேதி நேரில் ஆஜர் ஆகுமாறு டில்லி நீதிமன்றம்(Delhi Court) நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அன்றைய தினம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆகி அவர் விளக்கம் அளித்த பிறகு, அடுத்த கட்ட நடவடிக்கை தொடங்கும் என டில்லி வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க : ராகுலின் காட்டுமிராண்டி பேச்சு : தேர்தல் ஆணையம் பதிலடி

ராபர்ட் வதேராவுக்கு சலுகைகள் :

காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் ஹரியானா, ராஜஸ்தான் மாநிலங்களில் நடந்த நில பேரங்கள் தொடர்பாக வதேரா மீது ஏற்கனவே பண மோசடி வழக்குகள் நிலுவையில் உள்ளன. விவசாய நிலங்களை வணிக ரீதியாக மாற்றி பயன்படுத்த ராபர்ட் வதேராவுக்கு சலுகைகள் வழங்கப்பட்டதாக குற்றச்சாட்டுகள் உள்ளன.