
பீகார் சட்டமன்ற தேர்தல் :
Election Commission on Rahul Gandhi Remarks : காஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையில் ஐக்கிய ஜனதா தளம் - பாஜக கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. வரும் அக்டோபர் மாதம் இங்கு சட்டசபை தேர்தல் நடக்கிறது. தேர்தலுக்கு சில மாதங்களே உள்ள நிலையில், கடந்த ஒரு மாதமாக, வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடந்தது. இதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
65 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் :
இதன்படி, வீடு வீடாகச் சென்று வாக்காளர்களின் அடையாளங்களை தேர்தல் ஆணைய ஊழியர்கள் சரிபார்த்தனர். அப்போது, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில், 7 லட்சம் வாக்காளர்கள் பதிவு செய்ததும், 30 லட்சம் பேர் மற்ற மாநிலங்களுக்கு குடியேறி அங்கு வாக்காளர்களாக பதிவு செய்து இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. ஒட்டுமொத்தமாக, வரைவு வாக்காளர் பட்டியலில், 65 லட்சம் வாக்காளர்கள் இடம் பெற மாட்டார்கள் எனத் தெரிகிறது.
வரைவு வாக்காளர் பட்டியல் :
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு இருக்கிறது.. பீகாரில் 7.93 கோடி வாக்காளர்கள் இருப்பதாக கூறப்படும் நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் எத்தனை லட்சம் பேர் விடுபட்டனர் என்ற தகவல்கள் வெளியாகவில்லை. தேர்தல் ஆணைய இணையதளத்துக்கு சென்று, வாக்காளர் அடையாள அட்டை எண்ணை பதிவிட்டு, வரைவு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர் இருக்கிறதா என்பதை பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம்.
விவாதிக்க ராகுலுக்கு அழைப்பு :
வாக்காளர் பட்டியலில் பிரச்சினை தொடர்பாக தொடர்ந்து கருத்து தெரிவித்து வரும் ராகுல் காந்தி, கடும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகிறார். அவரை விவாதிக்க வருமாறு, ஜூன் மாதம் இரண்டு முறை தேர்தல் ஆணையம் இ-மெயில் அனுப்பியது. ஆனால் அவர் வரவும் இல்லை; பதிலும் அளிக்கவில்லை.
மேலும் படிக்க : பிகாரில் பெரும்புயலைக் கிளப்பிய வாக்காளர் பட்டியல் திருத்தம்
காட்டுமிராண்டித்தனமாக கருத்துகள் :
வாக்கு திருட்டில் தேர்தல் ஆணையம் ஈடுபட்டு வருவதாக காட்டுமிராண்டித்தனமாக கருத்துக்களை தெரிவித்து வரும் ராகுல் காந்தி, ஊழியர்களை மிரட்டும் வகையிலும் பேசி வருகிறார். இதுபற்றி தனது வருத்தத்தை பதிவு செய்துள்ள தேர்தல் ஆணையம், ராகுல் காந்தியின் பொறுப்பற்ற பேச்சுகளை முற்றிலும் புறக்கணிப்பதாக தெரிவித்து இருக்கிறது. நியாயமாகவும், வெளிப்படைத்தன்மையுடனும் பணியாற்றி வருவதாகவும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்துள்ளது.
=================