Dharmasthala Temple Case in Tamil 
இந்தியா

"தர்மஸ்தலா கோவில்’ புகழை கெடுக்க முயற்சி : புகார்தாரர் கைது

Dharmasthala Temple Case in Tamil : தர்மஸ்தலா கோவில் புகழை கெடுக்கும் வகையில் ஒருமாத காலமாக குற்றம்சாட்டி வந்த நபரை போலீசார் கைது செய்தனர்.

Kannan

மஞ்சுநாதா சுவாமி கோவில் :

Dharmasthala Temple Case in Tamil : கர்நாடக மாநிலம், தட்சிண கன்னடாவில் உள்ள தர்மஸ்தலாவில், புகழ் பெற்ற மஞ்சுநாதா சுவாமி கோவில்(Manjunatha Swamy Temple) உள்ளது. 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலில் உள்ள இறைவனை தரிசிக்க உலகம் முழுவதும் இருந்து ஆண்டு தோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.

கோவில் மீது குற்றச்சாட்டு :

இந்த கோவிலின் புகழுக்கு களங்கும் கற்பிக்கும் வகையில், ஒரு மாதத்திற்கும் மேலாக அவதுாறு செய்திகள் பரப்பப்பட்டு வந்தன. கோவில் வளாகத்தில் பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டதாகவும் இந்த எண்ணிக்கை 100ஐ தாண்டும் என்றும் திடுக்கிடும் குற்றச்சாட்டு எழுந்தது.

கோவில் ஊழியர் பரபரப்பு குற்றச்சாட்டு :

1995 முதல் 2014 வரை தர்மஸ்தலா மஞ்சுநாதா கோயிலிலில்(Dharmasthala Manjunatha Swamy Temple) தூய்மைப் பணியாளராக வேலைபார்த்த ஒருவர், நூற்றுக்கணக்கான பெண்கள் / சிறுமிகளின் சடலங்களைப் புதைத்ததாகப் பகிரங்கமாகக் கூறியது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.2014ல் தனது குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரும் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகவும், எனவே தான் தர்மஸ்தலாவை விட்டு வெளியேறியதாகவும் அந்த நபர் தெரிவித்திருந்தார்.

சிறப்புப் புலனாய்வுக் குழு :

நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த விவகாரம் பற்றி விசாரிக்க கர்நாடக அரசு ஒரு சிறப்புப் புலனாய்வுக் குழுவை(SIT) அமைத்தது. தனது குற்றச்சாட்டுகளை உண்மை என நிரூபிக்கும் வகையில், காவல்துறையினர் முன்பு புகார்தாரர் ஆரம்பத்தில் புதைக்கப்பட்ட மண்டை ஓடு ஒன்றை தோண்டி எடுத்து காண்பித்தார். இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில், சமர்ப்பித்த மண்டை ஓடு போலியானது என்றது அம்பலமானது.

புகார்தாரர் கைது :

எனவே, புகார் அளித்த நபரிடம் சிறப்பு புலனாய்வு பிரிவினர் நடத்திய தொடர் விசாரணையில், அவர் கூறிய அனைத்து தகவல்களும் பொய் என்பது நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து அந்த நபரை கைது செய்த போலீசார் இன்று மாலை அவரை நீதிபதி முன்று ஆஜர்படுத்துகின்றனர்.

அம்பலமான பொய்ப்புகார் :

இதன் பின்னர் அவர் பொய் சாட்சியம் அளித்தல் மற்றும் தவறான ஆதாரங்களை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்.

இன்று மாலை அவர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பு, புகார்தாரர் மருத்துவ பரிசோதனைக்காக உள்ளூர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

மேலும் படிக்க : ’கோவில் நிதியில்’ திருமண மண்டபம் கூடாது : உயர்நீதிமன்றம் உத்தரவு

தர்மஸ்தலா பிரச்சினையில்(Dharmasthala Temple Issue) உண்மை தெரியாமல், அரசியலாக்க முயன்ற எதிர்க்கட்சிகளுக்கு இந்த நடவடிக்கை சம்மட்டி அடியாக அமைந்து இருக்கிறது.

======