Exit Polls predicts, NDA alliance will win the Bihar assembly elections, again form the government 
இந்தியா

EXIT POLLS : ”மீண்டும் NDA தான்” : அடித்து சொல்லும் கணிப்புகள்

Bihar Assembly Election 2025 Exit Polls in Tamil : பிகார் சட்டமன்ற தேர்தலில் என்டிஏ கூட்டணி வெற்றி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தேர்தலுகு பிந்தைய கருத்துக் கணிப்புகள்த தெரிவிக்கின்றன.

Kannan

2 கட்டங்களாகபிகார் தேர்தல்

Bihar Assembly Election 2025 Exit Polls in Tamil : 243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. முதற்கட்டமாக 121 தொகுதிகளுக்கு கடந்த 6ம் தேதி நடைபெற்ற தேர்தலில் 64.46 சதவீத வாக்குகள் பதிவாகின. பிகார் தேர்தல் வரலாற்றில் இது அதிகபட்ச பதிவாகும்.

வாக்குப்பதிவு - பிகார் சாதனை

இரண்டாம் கட்டமாக 122 தொகுதிகளில் நேற்று இரண்டாவது மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 68.52 சதவீத வாக்குகள் பதிவாகின. அந்த வகையில் இரண்டு தேர்தல்களையும் சேர்த்து 68.76 சதவீத வாக்குகள் பதிவாகி சாதனை படைத்து இருக்கிறது. அதிக வாக்குகள் பதிவு ஆட்சி மாற்றத்திற்கான அறிகுறி என்று கூறப்படும் நிலையில், தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாகின.

அதன்படி நிதிஷ்குமார் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit Poll விவரங்கள்

NDTV - என்டிடிவி நடத்திய கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 152 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 84 இடங்களில் வெற்றி பெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dainik Bhaskar - தைனிக் பாஸ்கர் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 145 முதல் 160 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 73 முதல் 91 இடங்களில் வெற்றி பெறும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Timesnow - டைம்ஸ் நவ் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 145 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணிக்கு 95 இடங்கள் வரை கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chanakya Strategies - சாணக்யா வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்பில் தேசிய ஜனநாயக கூட்டணி 135 முதல் 138 இடங்களில் வெற்றி பெறும் எனவும், மெகா கூட்டணி 100 முதல் 108 இடங்களில் வெற்றி பெறும் எனவும் தெரிவித்துள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சிக்கு 0-5 இடங்கள் கிடைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதர கட்சிகள் அதிகபட்சமாக 8 இடங்கள் வரை வெற்றி பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 கணிப்புகள் - என்டிஏ வெற்றி!

இதேபோன்று, Matrize, People's Insight, Peoples Pulse, JVC, P-Marq என 9 கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியிடப்பட்டு இருக்கின்றன. அனைத்திலும் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சி அமைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியை பொருத்தவரை வாக்கு சதவீதத்தில் வெற்றியும் கிடைக்காது, பெரிய தோல்வியும் இருக்காது என்று கூறப்பட்டுள்ளது.

14ம் தேதி வாக்கு எண்ணிக்கை

இரண்டு கட்ட தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் ( 14ம் தேதி ) எண்ணப்படுகின்றன. அன்று பிற்பகலுக்குள் முன்னணி நிலவரம் தெரிய வரும், மாலைக்குள் முடிவுகள் வெளியாகி, பிகார் அரியணையை அலங்கரிக்க போவது நிதிஷ்குமாரா? அல்லது தேஜஸ்வியா என்பது தெரிய வந்து விடும்.

=====