இரண்டு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு :
Nirmala Sitharaman on Next Gen GST Reforms : இந்தியாவில் செயல்பாட்டில் இருக்கும் ஜிஎஸ்டி வரி விதிப்பு நான்கு அடுக்குகளாக உள்ளது. இதில் மாற்றம் கொண்டு வர வேண்டும், சாமான்ய மக்கள் அதிக பயன்பெறும் வகையில் வரி குறைப்பு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது. இதை பரிசீலித்த மத்திய பாஜக அரசு, நான்கு அடுக்கு வரி விதிப்பை 2 அடுக்குகளாக மாற்றி, பெரும்பாலான பொருட்கள் மீதான வரியை குறைத்து, பலவற்றுக்கு பூஜ்யம் வரியாக கொண்டு வந்து இருக்கிறது.
22ம் தேதி முதல் மக்களுக்கு அதிகபலன் :
இந்தநிலையில், டெல்லியில் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள்(Next Gen GST Reforms) பற்றிய கலந்துரையாடல் நிகழ்ச்சியில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரையாற்றுகையில், ”ஜிஎஸ்டி வரி சீர்திருத்தத்துக்கு பிறகு, வரிகுறைப்பு மூலம் கிடைக்கும் பயன்களை வாடிக்கையாளருக்கு 22ம் தேதி(New GST Reforms Effective Date) முதல் அளிக்க பல நிறுவனங்கள் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறினார்.
மக்களுக்கு வரி நிவாரணம் கிடைக்கும் :
ஏழைகள், நடுத்தர மக்களுக்கு வரி நிவாரணம் அளிக்க வேண்டும், நடுத்தர மக்களின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டும், விவசாயிகள் மற்றும் குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு உதவ வேண்டும், வேலைவாய்ப்பை உருவாக்குதல், ஏற்றுமதி துறைகளில் கவனம் செலுத்துதலுக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படும்.
வரி வருவாய் அதிகரிப்பு :
ஜிஎஸ்டி வரி 2017-18ம் நிதி ஆண்டில் ரூ.7.19 லட்சம் கோடியாக இருந்தது. 2025ம் நிதி ஆண்டில் ரூ.22.08 லட்சம் கோடியாக உயர்ந்து இருக்கிறது. வரி செலுத்துவோர் எண்ணிக்கை முன்பு 65 லட்சமாக இருந்தது. தற்போது 1.51 கோடியாக அதிகரித்து இருக்கிறது. ஜிஎஸ்டி சீர்திருத்தம்(GST Reforms) மூலம் பொருளாதாரத்தில் ரூ.2 லட்சம் கோடி நுழையும், மக்கள் கையில் சரளமாக பணம் புரளும்.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் வரி முறைகள் சிக்கலாக இருந்தன. எனவே தான் மத்திய பாஜக அரசு நாடு முழுவதும் ஒரே மாதிரியான ஜிஎஸ்டி முறையை அமல்படுத்தி இருக்கிறது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டாட்சி(GST Council Meeting) தத்துவத்துக்கு சிறந்த உதாரணமாக செயல்படுகிறது.
மேலும் படிக்க : GST 2.0 : தமிழகம் பெறும் பலன்கள் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா
12 சதவீதம் வரி விதிப்பில் இடம்பெற்று இருந்த 99 சதவீத பொருட்கள் 5 சதவீத வரி விதிப்பிற்கு மாற்றப்பட்டு இருக்கின்றன. 28 சதவீத வரி விதிப்பில் இருந்த 90 சதவீத பொருட்கள் 18 சதவீத வரி விதிப்பிற்கு மாற்றப்பட்டுள்ளன.