GST 2.0 : தமிழகம் பெறும் பலன்கள் : புத்தகத்தை வெளியிட்டார் நிர்மலா

GST 2.0 Reforms Impact in Tamil Nadu: ஜிஎஸ்டி வரி குறைப்பு மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் பலன்கள், விலை குறையும் பொருட்கள் குறித்த விவரங்கள் அடங்கிய புத்தகத்தை அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார்.
GST 2.0 Reforms Impact in Tamil Nadu
GST 2.0 Reforms Impact in Tamil Nadu
2 min read

GST 2.0 விவரங்கள் வெளியீடு :

GST 2.0 Reforms Impact in Tamil Nadu : இதுவரை நடைமுறையில் இருந்த நான்கு அடுக்கு ஜிஎஸ்டி வரி விதிப்பு, இரண்டு அடுக்குகளாக குறைக்கப்பட்டு, வரும் 22ம் தேதி(New GST Effective Date) முதல் அமலுக்கு வருகிறது. இதனால் பல்​வேறு பொருட்​களின் விலை குறைய இருக்​கின்​றன. தமிழகத்​தின் வளர்ச்​சிக்​கான ஜிஎஸ்டி சீர்​திருத்​தங்​கள் குறித்த ஜிஎஸ்டி 2.0 என்ற புத்​தகத்தை மத்​திய நிதி​யமைச்​சர் நிர்​மலா சீதா​ராமன் சென்​னை​யில் வெளி​யிட்​டார்.

நவராத்திரிக்கு முன்பே வரி குறைப்பு :

”பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்​கை​யான ஜிஎஸ்டி குறைப்பு என்பது ஒவ்​வொரு குடிமக​னின் வெற்​றி​யாகும். தீபாவளிக்கு முன்பு இதை அமல்​படுத்த வேண்​டும் என பிரதமர் விரும்​பி​னார். ஆனால் நவராத்​திரிக்கு முன்பே வரி​குறைப்பு அமலாகும் என்​றார்.

GST 2.0 : வரி குறையும் பொருட்களின் விவரங்கள் :

* தமிழகத்​தில் புதிய டிராக்​டர்(New GST Rates on Tractor) வாங்​கு​வோர் ரூ.42 ஆயிரம் வரை சேமிக்​கலாம். டிராக்​டர்​களுக்​கான ஜிஎஸ்டி 12% - 5% குறைக்​கப்​பட்​டுள்​ளது.

* டிராக்​டர் டயர்​கள், உதிரி பாகங்​களுக்​கான ஜிஎஸ்டி 18% - 5%. இதனால் ரூ.50 ஆயிரம் மதிப்​புள்ள டிராக்​டர் டயர்களின் விலை​யில் ரூ.6,500 வரை குறையும்.

* காஞ்​சிபுரம் பட்​டு, மதுரை சுங்​குடி துணி​களுக்கு 12% - 5% ஆக குறைப்பு

* ரூ.40 ஆயிரத்​துக்கு டிவி வாங்​கு​வோர் ரூ.4 ஆயிரம் வரை சேமிக்​கலாம்

* தஞ்​சாவூர் பொம்​மை​கள், காஞ்​சிபுரம் கைவினை பைகள், பவானி ஜமக்​காளம், சுவாமிமலை வெண்கல சின்​னங்​கள், மணப்​பாறை முறுக்​கு, தென்னை நார் பொருட்​களுக்கு ஜிஎஸ்டி 5% ஆக இருக்கும்.

* ரூ.1 லட்​சம் மதிப்​பிலான இருசக்கர வாக​னங்​களுக்கு ரூ.10 ஆயிரம் வரை​யும், ரூ.6 லட்​சம் மதிப்​பிலான சிறிய ரக கார்​களுக்கு ரூ.60 ஆயிரம் வரை​யும், ரூ.3 லட்​சம் மதிப்​பிலான ஆட்​டோக்​களுக்கு ரூ.30 ஆயிரம் வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது.

* பரோட்​டா, ரொட்​டி, சப்​பாத்தி போன்ற உணவு பொருட்​களுக்கு வரி​விலக்கு அளிக்​கப்​பட்​டுள்​ள​தால் ரூ.5 முதல் ரூ.10 வரை செலவு குறை​யும்.

* தமிழக பள்​ளி​களில் பயின்று வரும் 1.5 கோடி குழந்​தைகள் பயனடை​யும்(New GST on Stationary) வகை​யில் குறிப்​பேடு​கள், ரப்​பர், பென்​சில், கிரெ​யான்ஸ் போன்​றவற்​றில் ரூ.850 வரை பெற்​றோ​ரால் இனி சேமிக்க முடி​யும்.

* ரூ.1,000 மதிப்​பிலான மருந்​துகளுக்கு ரூ.100 வரை ஜிஎஸ்டி குறைக்​கப்​பட்​டுள்​ளது. குறிப்​பாக புற்​று​நோய்​களுக்​கான மருந்​துகளுக்கு ரூ.1200 வரை விலை குறை​கிறது.

* கட்​டு​மானத் தொழில்​களில் ரூ.50 ஆயிரம் மதிப்​பிலான சிமென்ட் கொள்​முதலில் ரூ.5 ஆயிரம் வரை சேமிக்கலாம்.

* தமிழகத்​தில் பிரதமரின் வீட்​டு​வசதி திட்​டத்​தின்​கீழ் கட்​டப்​படும் வீடு​களுக்கு வரி குறைப்பு நேரடி பயனை அளிக்கும்.

மேலும் படிக்க : GST Tax : பால், விவசாயத்துக்கு வளமான எதிர்காலம் : விலை குறைகிறது

* ரூ.35 ஆயிரம் மதிப்​பிலான ஏசி​க்களின் விலை ரூ.3,500 வரை​யும் ரூ.60 ஆயிரம் மதிப்​பிலான ஹீட்​டர், ரூ.7 ஆயிரம்​ வரை​யிலும்​ விலை குறை​யும். இவ்​வாறு அந்தப் புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

==========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in