German Foreign Minister Johann Wadephul Praises India ANI
இந்தியா

தொழில்நுட்ப மையமாக மாறியுள்ள இந்தியா : ஜெர்மனி பாராட்டு

German Foreign Minister Johann Wadephul Praises India : புதுமையான மையமாகவும் தொழில்நுட்ப மையமாகவும் இந்தியா மாறியுள்ளது என்று ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடெபுல் தெரிவித்துள்ளார்.

MTM

German Foreign Minister Johann Wadephul Praises India : இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ள ஜெர்மன் வெளியுறவு அமைச்சர் ஜோஹான் வாடெபுல், பெங்களூரு பயணத்தின் போது இந்தியாவின் தொழில்நுட்பத் துறையின் வளர்ச்சியைக் கண்டு வியப்பு அடைந்தார். செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் மேலும் கூறியதாவது:

பெர்லினும் புது தில்லியும் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதன் மூலம் பல நன்மைகளைப் பெற முடியும். குறிப்பாக ஒத்துழைப்பை மேலும் விரிவாக்கினால் நமது பொருளாதாரங்கள் பெரிதும் பயனடையும். நேற்று பெங்களூருவில் இருந்தேன், இந்தியா எவ்வாறு ஒரு புதுமையான மையமாகவும் தொழில்நுட்ப மையமாகவும் மாறியுள்ளது என்பதை நேரில் கண்டேன்.

எழுச்சி பெறும் பொருளாதார வல்லரசாகவும், உலகின் மிகப்பெரிய மக்கள் தொகை மற்றும் மிகப்பெரிய ஜனநாயக நாடாகவும் இந்தியா உள்ளது. மேலும் வியூகம் வகுப்பதில் உலக அளவில் முக்கியத்துவம் மிகுந்த நாடாகவும் உள்ளது.

இந்தியாவும் ஜெர்மனியும் விதிமுறை அடிப்படையிலான சர்வதேச ஒழுங்கைப் பாதுகாக்கும் நோக்கத்தால் ஒன்றுபட்டுள்ளன, இதில் இந்தோ-பசிபிக் பகுதியில் கடல் வணிகப் பாதைகளின் சுதந்திரமும் அடங்கும். இந்தோ-பசிபிக் பகுதியில் சீனாவின் ஆக்ரோஷமான நடவடிக்கைகள் எங்கள் இரு நாடுகளுக்கும் கவலையளிக்கின்றன. பொதுவாக எபாதுகாப்பு மற்றும் ஆயுதத் துறைகளில் ஒத்துழைப்பை மேலும் விரிவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம்.

ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு போர் தற்போது எங்கள் பாதுகாப்பு கொள்கையில் மிகப்பெரிய சவாலாக உள்ளது.

இந்தியா அடுத்த செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டை நடத்தவிருப்பது, புதிய தொழில்நுட்பத் துறையில் முன்னணியில் இருக்கும் இந்தியாவின் முனைப்பையும் உரிமையையும் காட்டுகிறது.

மேலும் படிக்க : 6 முறை வெளிநாடு பயணம், எங்கே முதலீடு? : வெள்ளை அறிக்கை தாங்க...

சுமார் 31 பில்லியன் யூரோக்கள் வர்த்தகத்துடன், இந்தியா ஜெர்மனியின் மிக முக்கியமான வர்த்தகப் பங்காளியாக(Germany India Trade) உள்ளது. அதை இரட்டிப்பாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம், இந்தியாவும் இதற்கு நேர்மறையான மற்றும் நம்பிக்கையான பார்வையை எடுத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.