பீதியை கிளப்பும் தங்கம் விலை
Gold and Silver Rates Today in Chennai : அக்டோபர் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை ஏற்றத்தை சந்தித்து வருகிறது. நாளுக்கு நாள் உயரும் தங்கம் விலையால் சாமானிய மக்கள் நகையை நினைத்து கூட பார்க்க முடியாத சூழ்நிலை உருவாகி விட்டது. நேற்று காலை சற்று சரிந்த தங்கம் விலை மீண்டும் மாலையில் ஏற்றம் கண்டது. நேற்று முன்தினம் (அக் 09) தங்கம் கிராம் 11,425 ரூபாய்க்கும், சவரன் 91,400 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. வெள்ளி கிராம் 177 ரூபாய்க்கு விற்பனையானது.
நேற்று (அக் 10) காலை தங்கம் விலை கிராமுக்கு 165 ரூபாய் குறைந்து, 11,260 ரூபாய்க்கு விற்கப்பட்டது. சவரனுக்கு 1,320 ரூபாய் சரிவடைந்து, 90,080 ரூபாய்க்கு விற்பனையானது.ஆனால், மாலையில் உயர்ந்த தங்கம் விலை, ஒரு சவரன் ரூ.90,720க்கு விற்பனை ஆனது.
கிடுகிடுவென உயர்வு
இந்நிலையில் இன்று (அக்டோபர் 11) 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.91,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.85 உயர்ந்து ஒரு கிராம் ரூ.11,425க்கு விற்பனை ஆகிறது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.91 ஆயிரத்தை கடந்து மீண்டும் புதிய உச்சம் தொட்டுள்ளது.
18 காரட் தங்கம் விலையும் கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,450க்கும், சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ஒரு சவரன் ரூ.75,600க்கும் விற்பனையாகிறது.
மேலும் படிக்க : Gold Rate Today: உச்சம் தொடும் தங்கம் விலை - அதிர்ச்சியில் மக்கள்!
வெள்ளி விலையும் புதிய உச்சம்
தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. அதன்படி சென்னையில் இன்று வெள்ளி விலை ஒரு கிராம் ரூ.3 உயர்ந்து ரூ.187 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.3 ஆயிரம் உயர்ந்து ரூ.1,87,000க்கு விற்பனை செய்யப்படுகிறது.
============