Gold Price Today in Chennai 
இந்தியா

79,000ஐ நெருங்கிய தங்கம் : கிராம் 10 ஆயிரத்தை தொடுவதால் அதிர்ச்சி

Gold Rate Increased Today in Chennai : ஆபரண தங்கத்தின் விலை சவரன் 79 ஆயிரத்தை நெருங்கி பொதுமக்கள் அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது.

Kannan

ஏற்றத்தில் தங்கம் விலை :

Gold Rate Increased Today in Chennai : சர்வதேச நிலவரங்கள், அமெரிக்கா விதித்து வரும் கூடுதல் வரி, தங்கத்தில் முதலீடு அதிகரிப்பு உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலை ஏற்ற இறக்கத்துடன் இருக்கிறது. கடந்த சில நாட்களாக தங்கம் விலை நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

79 ஆயிரத்தை நெருங்கும் சவரன் :

அதன்படி, சென்னையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து, ஒரு சவரன் ரூ.78,920க்கு விற்பனை(22 Carat Gold Rate Today) செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.70 உயர்ந்து ஒரு கிராம் ரூ.9,865க்கு விற்பனை ஆகிறது.

சவரன் தங்கம் விலை ரூ.79 ஆயிரத்தையும், ஒரு கிராம் 10 ஆயிரத்தையும் நெருங்கி நகைப்பிரியர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

மேலும் படிக்க : Gold Silver Price : 78,000ஐ நெருங்கியது தங்கம் : உச்சத்தில் வெள்ளி

24 கேரட் தங்கம் விலை ஒரு கிராம் ரூ.10,762 ஆக உள்ளது,

18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 உயர்ந்து ஒரு கிராம் ரூ. 8,170க்கும், சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.65,360க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

5 நாட்களில் தங்கம் விலை நிலவரம் :

* செப்டம்பர் 05, 2025 ₹10,762 (+76) ₹9,865 (+70)

* செப்டம்பர் 04, 2025 ₹10,686 (-11) ₹9,795 (-10)

* செப்டம்பர் 03, 2025 ₹10,697 (+88) ₹9,805 (+80)

* செப்டம்பர் 02, 2025 ₹10,609 (+21) ₹9,725 (+20)

* செப்டம்பர் 01, 2025 ₹10,588 (+93) ₹9,705 (+85)

வெள்ளி விலை மாற்றம் இல்லை :

வெள்ளி விலையில் 3வது நாளாக மாற்றமில்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.137க்கும்(Silver Rate Today), ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 37ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.

=================