
Gold Silver Price Today in Chennai : சர்வதேச நிலவரங்கள், பல்வேறு நாடுகள் அன்னிய செலாவணி கையிருப்பை அதிகரிக்க தங்கத்தை கொள்முதல் செய்வது, அமெரிக்க டாலருக்கு எதிரான, இந்திய ரூபாய் மதிப்பு சரிவு உள்ளிட்ட காரணங்களால், தங்கம் விலை அதிகரித்து வருகிறது.
தங்கம் விலை ஏறுமுகம் :
அந்த வகையில் கடந்த ஒருவார காலமாக தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த சனிக்கிழமை, 22 காரட் ஆபரண தங்கம் கிராம், 9,620 ரூபாய்க்கும், சவரன், 76,960 ரூபாய்க்கும் விற்பனையானது. வெள்ளி கிராம், 134 ரூபாய்க்கு விற்கப்பட்டது. நேற்று, தங்கம் விலை கிராமுக்கு, 85 ரூபாய் உயர்ந்து, 9,705 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 680 ரூபாய் அதிகரித்து எப்போதும் இல்லாத வகையில், 77,640 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
78,000ஐ நெருங்கும் தங்கம் :
இந்நிலையில் இன்று 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 அதிகரித்து ஒரு சவரன் ரூ.77,800க்கு விற்பனை ஆகிறது. கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ஒரு கிராம் ரூ.9,725க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் 78 ஆயிரத்தை நெருங்கி இருப்பதால், பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
24 கேரட் கிராம் ரூ.10,609
கிராம் 24 கேரட் தங்கம் விலை ₹10,609 ஆக உள்ளது. இதேபோல் 1 கிராம் 22 கேரட் தங்கம் விலை ரூ.9,725 ஆகவும், 1 கிராம் 18 கேரட் தங்கம் விலை ரூ.8,045 ஆகவும் உள்ளது.
மேலும் படிக்க : 10,000ஐ நெருங்கும் ஒரு கிராம் தங்கம் : புதிய உச்சத்தில் வெள்ளி
8 மாதங்களில் சவரனுக்கு ரூ.20,440 உயர்வு :
தங்கம் விலை ஜனவரி 1ம் தேதி கிராம், 7,150 ரூபாய்க்கும், சவரன், 57,200 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. கடந்த எட்டு மாதங்களில் மட்டும் கிராமுக்கு, 2,555 ரூபாயும், சவரனுக்கு, 20,440 ரூபாயும் அதிகரித்து இருக்கிறது.
வரலாறு காணாத உச்சத்தில் வெள்ளி
வெள்ளி விலையும் நாள்தோறும் புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. தங்கத்திற்கு போட்டியாக வெள்ளி விலையும் அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது. அதன்படி, இன்று ஒரு கிராம் வெள்ளி விலை ₹136.10 ஆகவும், ஒரு கிலோ வெள்ளி விலை ₹1,36,100 ஆகவும் உள்ளது.
======