Gold Reserves by Country 2025 List 
இந்தியா

தங்கத்தை குவிக்கும் நாடுகள் : இந்தியாவின் கையிருப்பு 879.98 டன்

Gold Reserves by Country 2025 List : உலக நாடுகளுக்கும் தங்கம் பாதுகாப்பான முதலீடாக இருக்கும் நிலையில், இந்தியாவிடம் 879 டன் தங்கம் கையிருப்பில் உள்ளது.

Kannan

தொடர் உச்சத்தில் தங்கம் :

Gold Reserves by Country 2025 List : தங்கம் விலை (Gold Price) வரலாறு காணாத உச்சத்தை நாள்தோறும் தொட்டு மிரட்டி வருகிறது. இன்றைய நிலவரப்படி தங்கத்தின் விலை சவரன் 81 ஆயிரத்தை தாண்டி இருக்கிறது. இதேநிலை நீடித்தால், இந்த ஆண்டு இறுதிக்குள் தங்கம் விலை சவரன் 1 லட்சத்தை எட்டி விடும்.

தங்க முதலீடு - உலக நாடுகள் ஆர்வம் :

தங்கம் என்பது மக்களின் ஆபரணம், முதலீடாக மட்டுமின்றி, ஒரு நாட்டின் பொருளாதார வலிமையை குறிக்கும் காரணியாகவும் இருக்கிறது. எனவேதான் தங்கத்தை கையிருப்பில் வைப்பதில் உலக நாடுகள் அக்கறை காட்டுகின்றன.

இந்தியாவின் தங்க கையிருப்பு :

இந்தியாவின் வெளிநாட்டு நாணய கையிருப்பு(India's Foreign Exchange Reserves), ஆகஸ்ட் 29ம் தேதி நிலவரப்படி 3.51 பில்லியன் அமெரிக்க டாலர் உயர்ந்து, மொத்தம் 694.23 பில்லியன் டாலர் (சுமார் ரூ.57.20 லட்சம் கோடி) ஆக இருந்தது. இதில் தங்கத்தின் பங்கு அதிகமாக உள்ளது. தங்கம் கையிருப்பு 1.7 பில்லியன் டாலர் உயர்ந்து, மொத்தம் 86.769 பில்லியன் டாலர் ஆகியுள்ளது. அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.7.20 லட்சம் கோடி ஆகும்.

இந்தியாவிடம் தங்கம் 879.98 டன் :

2025 ஜூன் நிலவரப்படி இந்தியாவிடம் தங்க கையிருப்பு 879.98 டன் ஆக உள்ளது(India gold reserves in tons). கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது, 39 டன் தங்கம் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. இந்தியாவின் மொத்த வெளிநாட்டு நாணய கையிருப்பில் தங்கத்தின் பங்கு 12 சதவீதம் ஆக உயர்ந்துள்ளது.

தங்கத்தை கையிருப்பில் வைத்துள்ள நாடுகள் :

உலக அளவில் அமெரிக்காவிடம் 8,133.5 டன் (ரூ.80.3 லட்சம் கோடி) தங்கம் கையிருப்பில் இருக்கிறது(America gold reserves in tons). எனவே, டாப் 10 நாடுகள் பட்டியலில் அமெரிக்கா முதலிடம்(Top 10 Countries with Most Gold Reserves List 2025) வகிக்கிறது.

* ஜெர்மனி: 3,351.5 டன் (ரூ.33.10 லட்சம் கோடி)

* இத்தாலி: 2,451.8 டன் (ரூ.24.20 லட்சம் கோடி)

* பிரான்ஸ்: 2,437 டன் (ரூ.24.10 லட்சம் கோடி)

* ரஷ்யா: 2,332.7 டன் (ரூ.23.10 லட்சம் கோடி)

* சீனா: 2,279.6 டன் (ரூ.22.60 லட்சம் கோடி)

* சுவிஸ் : 1,039.9 டன் (ரூ.10.30 லட்சம் கோடி)

* இந்தியா: 879.98 டன் (ரூ.7.20 லட்சம் கோடி). அந்த வகையில் இந்தியா எட்டாவது இடத்தில் உள்ளது.

* ஜப்பான்: 845.97 டன்கள்

* நெதர்லாந்து: 612.4 டன்கள்

மேலும் படிக்க : "28 லட்சம் கோடி" : இந்தியாவின் முதல் பணக்காரர் முகேஷ் அம்பானி

================