
Mukesh Ambani Family Net Worth 2025 : இந்தியாவில் பெரு நிறுவனங்களை நடத்தி வரும் செல்வந்தர்கள் ஆண்டு தோறும் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய் வருவாய் ஈட்டுகின்றனர். இவர்கள் நடத்தும் நிறுவனங்கள் மூலம் ஆயிரக் கணக்கானோர் வேலைவாய்ப்பை பெறுகின்றனர். ஆண்டுதோறும் இந்திய பெரும் பணக்காரர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருகிறது.
பணக்காரர்கள் சொத்து ரூ.140 லட்சம் கோடி :
ஹுருன்(Hurun India Rich List 2025) மற்றும் பார்கிளேஸ் இணைந்து வெளியிட்ட புதிய அறிக்கையின்படி, இந்தியாவின் முதல் 300 பணக்கார குடும்பங்களின் மொத்த சொத்து மதிப்பு ரூ.140 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டு இருக்கிறது.
முதலிடத்தில் முகேஷ் அம்பானி :
இதில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானியின் குடும்பம் ரூ.28 லட்சம் கோடி(Mukesh Ambani Family Net Worth 2025) சொத்துகளுடன் முதலிடத்தில் உள்ளது. அம்பானி குடும்பத்தின் சொத்து மட்டும் நாட்டின் ஜிடிபியில் 12% பங்களிக்கிறது.
அதானி(Adani Group Net Worth) குடும்பத்தின் ரூ.14 லட்சம் கோடி சொத்து மதிப்பை விட 2 மடங்கு அதிகமாகும்.
2வது இடத்தில் பிர்லா குழமம் :
ரூ.6.47 லட்சம் கோடி சொத்துகளுடன் பிர்லா குடும்பம் 2வது இடத்திலும்(Birla Group Net Worth) ரூ.5.7 லட்சம் கோடி சொத்து மதிப்புடன் ஜுண்டால் குடும்பம் 3வது இடத்திலும் உள்ளன. 4வது இடத்தில் பஜாஜ் குடும்பம், 5வது இடத்தில் மகேந்திர குடும்பம் உள்ளன.
HCL நாடார் - 6வது இடம் :
6வது எச்சிஎல்(HCL Shiv Nadar Net Worth) நாடார் குடும்பம், 7வது இடத்தில் முருகப்பா குடும்பம், 8வது விப்ரோவின் பிரேம்ஜி குடும்பமும் 9வது இடத்தில் அணில் அகர்வால் குடும்பமும் உள்ளன.
மேலும் படிக்க : உலகின் டாப் 10 பணக்காரர்கள் : முதலிடத்தில் எலான் மஸ்க்
முதல் தலைமுறை அதானி முதலிடம் :
முதல் தலைமுறை தொழில் முனைவோர்களால் உருவாக்கப்பட்ட குடும்ப நிறுவனங்களில் அதானி குடும்பம்(Adani Group) முதலிடத்தில் உள்ளது.
==============