Amit Shah on Naxal Free Country India  ANI
இந்தியா

Naxal Free : ’நக்சல் இல்லாத நாடாக இந்தியா’ : அமித்ஷா திட்டவட்டம்

Amit Shah on Naxal Free Country India : 2026ம் ஆண்டிற்குள் இந்தியா நக்சல்கள் இல்லாத நாடாக மாற்றப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்து இருக்கிறார்.

Kannan

நக்சல்கள் ஒழிப்பு நடவடிக்கை :

Amit Shah on Naxal Free Country India : சத்தீஸ்கர் மாநிலம் கர்ரேகுட்டா மலையில் 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' ( Operation Black Forest ) நடவடிக்கையை மத்திய பாதுகாப்பு படையினர், மாநில போலீசார் இணைந்து வெற்றிகரமாக நடத்தி முடித்தனர். இந்த நடவடிக்கையில், நக்சல் அமைப்பில் முக்கிய நபர்களாக கருதப்படும் 27 பேர் உயிரிழந்தனர். இது பாதுகாப்பு படையினருக்கு மிகப்பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

பாதுகாப்பு படையினர் வெற்றி :

இந்த நிலையில், 'ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட்' நடவடிக்கையில் ஈடுபட்ட

மத்திய பாதுகாப்பு படையினர் மற்றும் சத்தீஸ்கர் மாநில போலீசாரை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேரில் அழைத்து பாராட்டினார்.

அவர்களிடையே உரையாற்றிய அமித் ஷா(Amit Shah), ”ஆபரேஷன் பிளாக் பாரஸ்ட் நடவடிக்கையின் போது, பாதுகாப்பு படையினர் காட்டிய துணிச்சலும், வீரமும் நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளும் இந்திய வரலாற்றில் பொன் அத்தியாயமாக நினைவுகூரப்படும்.

தீரமுடன் போரிட்ட பாதுகாப்பு படையினர் :

ஒவ்வொரு மலை பகுதிகளிலும் நக்சலைட்டுகள் ஐஇடி வகை குண்டுகளை மறைத்து வைத்திருந்த போதும், பாதுகாப்புப் படையினர் அதிக மன உறுதியுடன் இந்த நடவடிக்கையை மேற்கொண்டு பெரிய நக்சல் முகாம்களை(Naxal Camp) வெற்றிகரமாக அழித்தனர்.

நக்சல்கள் முற்றிலுமாக அழிப்பு :

கரேகுட்டா மலையில் நக்சல்கள் பதுங்கி இருந்த இடம் துல்லியமாக அழிக்கப்பட்டது. பள்ளிகள், மருத்துவமனைகள் மற்றும் அரசு நலத்திட்டங்களை நக்சலைட்டுகள்(Karregutta Naxal Operation) சீர்குலைத்தனர். அரசு நலத்திட்டங்களை முடக்கினர். அவர்கள் வெற்றிகரமாக ஒழிக்கப்பட்டது பாதுகாப்பு படையினருக்கு கிடைத்த வெற்றியாகும்.

காயமடைந்தவர்களுக்கு தேவையான உதவி :

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது பலத்த காயமடைந்த பாதுகாப்புப் பணியாளர்களை ஆதரிக்கவும், அவர்களின் வாழ்க்கை எளிதாக்கப்படுவதை உறுதி செய்யவும் பாஜக அரசு தேவையான அனைத்து நடவடிக்கைகளை எடுக்கும்.

மேலும் படிக்க : Amit Shah: ’பாகிஸ்தானுக்கு நற்சான்று’: காங்கிரசை தோலுறித்த அமித்ஷா

2026க்குள் நக்சலிசம் ஒழிக்கப்படும்

2026ம் ஆண்டு மார்ச் 31ம் தேதிக்குள் நாட்டிலிருந்து நக்சலிசத்தை ஒழிக்க மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது(Naxal Free Country India 2026). விரைவில் நக்சல் இல்லாத நாடாக இந்தியா மாறும்” இவ்வாறு அமித் ஷா உரையாற்றினார்.

===========