Amit Shah About Swami Vivekananda Speech in Chicago : சுவாமி விவேகானந்தர் சிகாகோ உலக மதங்களின் மாநாட்டில் நிகழ்த்திய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த உரை நிகழ்த்தப்பட்ட நாள் இன்று. இதையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது எக்ஸ் தளத்தில் அந்த உரையின் முக்கியத்துவம் குறித்து பதிவிட்டுள்ளார்.
இந்த வரலாற்று நாளில், சுவாமி விவேகானந்தர் உலக மதங்களின் மாநாட்டில் ஆற்றிய உரை மனிதகுலத்தை உலுக்கியது, நமது புராதன ஆன்மீகத்தின் கொள்கைகள் மூலம் ஒற்றுமை மற்றும் நல்வாழ்வுக்கான புதிய பாதையை மனிதகுலத்திற்கு வெளிச்சமிட்டது என அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி ஜியின் சிகாகோ உரையின்(Swami Vivekananda Speech in Chicago) ஆண்டு நிறைவைக் குறிக்கும் இந்த நாளில், இளைஞர்களை இந்த உத்வேகத்தின் ஊற்றிலிருந்து பயன்பெறவும், புதிய இந்தியாவையும், சிறந்த உலகத்தையும் உருவாக்க அவரது அறிவொளி உரையை மீண்டும் படிக்கவும் நான் அழைப்பு விடுக்கிறேன் என்றும் அந்தப்பதிவில் அமித்ஷா(Amit Shah Tweet) குறிப்பிட்டுள்ளார்.
சுவாமி விவேகானந்தர், ஜனவரி 12, 1863 இல் கல்கத்தாவில் பிறந்தவர்(Swami Vivekananda Biography in Tamil). அவர் இயற்பெயர் நரேந்திரநாத் தத்தா. ராமகிருஷ்ண பரமஹம்சரின் முதன்மை சீடராக இருந்தார். சேவை, கல்வி மற்றும் ஆன்மீக உயர்வு ஆகியவற்றின் கோட்பாட்டை வலியுறுத்தினார்.
சிகாகோ உரையில், விவேகானந்தர் இந்து மதத்தில் மத பன்முகத்தன்மை(Swami Vivekananda Speech) உள்ளடங்கியுள்ளது என்பதை வலியுறுத்தினார். பிரிவினைவாதம், மதவெறி மற்றும் குறுகிய மனப்பான்மைக்கு எதிராகவும் அவர் பேசினார்.
உலகிற்கு சகிப்புத்தன்மையையும், உலகளாவிய ஏற்பையும் கற்றுக்கொடுத்த ஒரு மதத்தைச் சேர்ந்தவன் என்று நான் பெருமைப்படுகிறேன். நாங்கள் உலகளாவிய சகிப்புத்தன்மையில் மட்டுமல்ல, எல்லா மதங்களையும் உண்மையாக ஏற்றுக்கொள்கிறோம்.
மேலும் படிக்க : Sengottaiyan : ஆம்.. அமித்ஷாவை சந்தித்தேன் : செங்கோட்டையன் பேட்டி
உலகின் எல்லா மதங்களையும், எல்லா நாடுகளையும் சேர்ந்த துன்புறுத்தப்பட்டவர்களையும், அகதிகளையும் பாதுகாத்த ஒரு தேசத்தைச் சேர்ந்தவன் என்று நான் பெருமைப்படுகிறேன். ரோமானிய கொடுங்கோன்மையால் அவர்களின் புனித கோவில் தகர்க்கப்பட்ட அதே ஆண்டில், தெற்கு இந்தியாவிற்கு வந்து எங்களிடம் அடைக்கலம் பெற்ற இஸ்ரேலியர்களின் தூய்மையான எச்சங்களை நாங்கள் எங்கள் மார்பில் அரவணைத்துக் கொண்டோம் .
இவையாவும் விவேகானந்தர் சிகாகோவில் உள்ள உலக மதங்களின் மாநாட்டில்(Swami Vivekananda in Chicago) பேசியவற்றில் குறிப்பிடத்தகுந்தவை.