IAF Chief AP Singh on Operation Sindoor 
இந்தியா

ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை வரலாற்றில் பதியவேண்டிய ஒன்று- ஏ.பி.சிங்

ஆபரேஷன் சிந்தூரால் இந்திய பாகிஸ்தானுக்கு மாபெரும் பதிலடி கொடுத்தது என அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சிந்தூர் ஆப்ரேஷன் குறித்து இந்திய விமானப்படை தளபதி ஏ.பி.சிங் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.

Bala Murugan

இந்தியா பதிலடி :

IAF Chief AP Singh on Operation Sindoor : காஷ்மீரில் சுற்றுலா வந்த இந்தியர்களை தாக்கி, திருமணம் ஆன புது தம்பதியர்களில் கணவன் உயிரிழப்பு உள்ளிட்ட சில உயிரிழப்புகள் பெரும் சர்ச்சைக்குள்ளானது. இந்நிலையில், இதற்கு தாங்கள் தான் காரணம் என வெளிப்படையாக பாகிஸ்தான் நாட்டின் முக்கிய தலைவர்கள் மௌனம் காத்தனர். இந்த சம்பவம் குறித்து தீவிர புலானாய்வு விசாரனையில் இருந்த இந்தியா இதற்கு பதிலடி கொடுக்க நேரம் எதிர்பார்த்து ஆயத்தமாக இருந்தனர்.

ஆபரேஷன் சிந்தூர் :

பின்னர், நேரம் கைகூடியவுடன் இரவோடு இரவாக பாகிஸ்தானுக்கு இந்திய ராணுவத்தின் தளபதிகள் மற்றும் இந்திய முக்கிய தலைவர்களின் தெளிவான திட்டத்துடன் ஆபரேஷன் சிந்தூர்(Operation Sindoor) நடைபெற்று வெற்றியடைந்தது.

ஏ.பி.சிங் பதில் :

சர்வதேச எல்லையான சர் கிரீக் பகுதியில் உட்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அதிகரித்துள்ளது என்றும் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையால் அதிக இழப்பை சந்தித்தது பாகிஸ்தான்தான் என்று இந்திய விமானப்படை தளபதி ஏ.பி. சிங்(AP Singh) பெருமிதம் தெரிவித்துள்ளார்.

வீழ்த்தப்பட்ட பாகிஸ்தான் :

மேலும் பேசிய ஏ.பி.சிங், ஆப்ரேஷன் சிந்தூர் நடவடிக்கையில் பாகிஸ்தானின் 10 போர் விமானங்கள் உட்பட 12 விமானங்கள் வீழ்த்தப்பட்டதாகவும் , அதில் அமெரிக்காவின் F-16 மற்றும் சீனாவின் J-17 ரக போர் விமானங்களும் அடங்கும் என்றும் தெளிவுபடுத்தினார்.

அதிக தாக்குதல் நடத்தி வெற்றி கண்ட இந்தியா

பாகிஸ்தானின் விமான தளங்களில்தான் அதிக தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தெளிவுபடுத்திய அவர், 4 இடங்களில் ரேடார்களும், 2 இடங்களில் கட்டுப்பாட்டு மையங்களும் மற்றும் 2 இடங்களில் ஓடுபாதைகளும் சேதமடைந்ததாக விளக்கமளித்தார். சர் கிரீக் பகுதியில் பாகிஸ்தான் உட்கட்டமைப்புகளை அதிகரித்து வரும் நிலையில், விமானப்படை தளபதி ஏ.பி.சிங்கின் இந்தத் தகவல்கள், உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும், பாகிஸ்தானுக்கு விடுக்கப்படும் எச்சரிக்கையாகவும் பார்க்கப்படுகிறது.

மேலும் படிக்க : மத்திய அரசு ஊழியர்களுக்கு ”தீபாவளி பரிசு” : அகவிலைப்படி 3% உயர்வு

இவரின் இந்த எச்சரிக்கை குறித்த பேச்சை இந்தியர்கள் மற்றும் ராணுவ பாதுகாப்பு ஜாம்பவான்கள் என பலரும் கொண்டாடியும், நல்லதொரு விமர்சனத்தை பரப்பியும் வருகின்றனர்.