மத்திய அரசு ஊழியர்களுக்கு ”தீபாவளி பரிசு” : அகவிலைப்படி 3% உயர்வு

3% DA Hike for Central Government Employees : அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 3 சதவீதம் உயர்த்தி மத்திய அரசு தீபாவளி பரிசாக வழங்கி இருக்கிறது.
Central Government increased the dearness allowance by 3 percent for government employees as Diwali gift
Central Government increased the dearness allowance by 3 percent for government employees as Diwali gift
1 min read

ஆண்டுக்கு இருமுறை DA உயர்வு

3% DA Hike for Central Government Employees : 7வது ஊதியக் குழுவின் பரிந்துரையின்படி, மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆறு மாதங்களுக்கு ஒருமுறை அகவிலைப்படி (DA) நிர்ணயிக்கப்படுகிறது. தற்போது அவர்களின் அடிப்படைச் சம்பளத்தில் 55% அகவிலைப்படி வழங்கப்பட்டு வருகிறது.

அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல்

அதன்படி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி – மார்ச் மற்றும் செப்டம்பர் – அக்டோபர் மாதங்களில் இந்த அகவிலைப்படி உயர்வு(DA Hike 2025) அறிவிக்கப்பட்டு, ஜனவரி மற்றும் ஜூலை மாதம் ஊதியத்தில் இருந்து கணக்கிடப்பட்டு வழங்கப்படும். பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்வுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு :

அந்தவகையில், மத்திய அரசு ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக 3 சதவீதம் அகவிலைப்படியை(DA Hike As Diwali Gift) ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. ஜூலை 1ம் தேதி முதல் அகவிலைப்படி உயர்வு கணக்கிட்டு வழங்கப்படும் என அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.

68.72 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர் :

அகவிலைப்படி மற்றும் அகவிலை நிவாரணம்(Dearness Allowance) ஆகியவற்றின் அதிகரிப்பால் மத்திய அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.10,084 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த உயர்வால் சுமார் 49.19 லட்சம் ஒன்றிய அரசு ஊழியர்களும், 68.72 லட்சம் ஓய்வூதியதாரர்களும் பயன் பெறுவார்கள்.

ஊழியர்களின் அடிப்படை சம்பளம் அவர்களின் மொத்த வருமானத்தில் 51.5% ஆகும். அகவிலைப்படி தோராயமாக 30.9 சதவீதம், வீட்டு வாடகை படி சுமார் 15.4% மற்றும் பயணப்படி சுமார் 2.2 சதவீதம் இருக்கும். நுகர்வோர் விலைக் குறியீட்டின் அடிப்படையில் அகவிலைப்படி(DA Calculator in Tamil) கணக்கிடப்படுகிறது.

மேலும் படிக்க : செப்டம்பரில் ஜிஎஸ்டி வசூல் ரூ.1.89 லட்சம் கோடி: 9 மாதங்களாக சாதனை

அடிப்படை சம்பளம் ரூ.18,000 ஆகவும், அகவிலைப்படி விகிதம் 50% ஆகவும் இருந்தால், அகவிலைப்படி தொகை ரூ.18,000-ல் 50% ஆக இருக்கும், அதாவது ரூ.9,000. இந்த ரூ.9,000 அடிப்படை சம்பளத்தில் சேர்க்கப்பட்டு சம்பளம் உயர்த்தப்படும்.

========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in