Increase the number of Lok Sabha constituencies to 816; Special meeting in the state cabinet, starting from April 16 google
இந்தியா

மக்​கள​வை தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த நடவடிக்கை: நாடாளு​மன்​ற சிறப்புக் கூட்​டம், ஏப்​ரல் 16ல் தொடக்கம்..

Lok Sabha Seats : மக்​கள​வைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 816 ஆக உயர்த்த வகை செய்​யும் மசோ​தாக்​களை நிறைவேற்ற நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டம் ஏப்​ரல் 16-ம் தொடங்க இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Rohini

நாடாளுமன்ற சிறப்பு கூட்டம்

Lok Sabha Seats after Delimitation 2026 : நாடாளு​மன்ற பட்​ஜெட் கூட்​டத் தொடரானது நடந்து முடிந்த நிலையில் இதன் 2வது அமர்வு நேற்​று நிறைவடைந்தது. கடைசி நாளான நேற்று நாடாளு​மன்ற விவகாரத் துறை அமைச்​சர் கிரண் ரிஜிஜு மாநிலங்​களவை​யில் பேசும்​போது,

அடுத்த சில வாரங்​களில் நாடாளு​மன்​றத்​தின் சிறப்பு கூட்​டத் தொடர் நடை​பெறும் என்றும் இதில் முக்​கிய மசோதாக்கள் நிறைவேற்​றப்​படும் என்றும் தெரிவித்திருந்தார்

இடஒதுக்கீட்டை முன்​கூட்​டியே அமல்​படுத்த திட்டம்

மக்களவைத் தொகு​தி​களின் எண்​ணிக்​கையை 543-ல் இருந்து 816 ஆக அதி​கரிக்க வகை செய்​யும் மசோ​தாவை நிறைவேற்றுவதன் ​மூலம் மகளிர் இடஒதுக்​கீட்டு சட்டத்தை முன்​கூட்​டியே அமல்​படுத்த முடி​யும் என்று குறிப்பிட்டுள்ளது.

மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம்

கடந்த 2023-ம் ஆண்​டில் மகளிர் இடஒதுக்​கீடு சட்​டம் நிறைவேற்றப்​பட்​டது. இதன்​படி மக்​களவை​யில் மூன்​றில் ஒரு பகுதி இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்பட வேண்​டும் என்று அச்சட்டம் தெரிவிக்கின்றது .

புதிய மசோ​தாக்​களின்​படி மக்​கள​வைத் தொகு​தி​களின் இடங்​கள் 816 ஆக அதி​கரிக்​கும். இதில் 273 இடங்​கள் மகளிருக்கு ஒதுக்​கீடு செய்​யப்​படும். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரிவித்தன.

புதிய மசோதா: மாநிலங்களின் விவரம்

இந்த புதிய மசோ​தா​ அமலுக்கு வரும் பட்சத்தில் , உத்தர பிரதேசத்​தில் தொகு​தி​களின் எண்ணிக்கை 120 ஆக உயரும், அதைபோல தமிழகத்​தில் 59 ஆக மட்​டுமே அதிகரிக்​கும்.

வட மாநிலங்​கள் கூடு​தலாக 200 தொகு​தி​களைப் பெறும். தென் மாநிலங்​களுக்கு 66 இடங்​கள் மட்​டுமே கிடைக்​கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது

மேலும் படிக்க :Lok Sabha : மக்களவையில் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் : 33% இட ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள்!