Lok Sabha : மக்களவையில் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம் : 33% இட ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள்!

MP Women Reservation Bill : பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீட்டை உறுதி செய்யும் 'நாரி சக்தி வந்தன் அதினியம்' மகளிர் இட ஒதுக்கீடு சட்டம் மூலம் மக்களவையில் இடங்களை அதிகரிக்க மத்திய அரசு திட்டம்
Central government plans to increase seats in Lok Sabha; 273 seats will be reserved for women under 33 percent
Central government plans to increase seats in Lok Sabha; 273 seats will be reserved for women under 33 percent google
1 min read

மக்களவையில் இடங்களை அதிகரிக்க திட்டம்

MP Women Reservation Bill in Lok Sabha Session 2026 : 2011ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே மக்களவை இடங்களை அதிகரிக்க மத்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் இதற்காக எதிர்க்கட்சிகளுடன் ஒருமித்த கருத்தை எட்ட அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது மத்திய அரசு தெரிவித்துள்ளது

'நாரி சக்தி வந்தன் அதினியம்

நாரி சக்தி வந்தன் ஆதினியம் மசோதா 2023 இல் மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் நிறைவேற்றப்பட்ட மசோதா ஆகும் .இந்த மசோதா மூலம் முன்மொழியப்பட்ட சட்டத்தின் கீழ் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீட்டை இது உறுதி செய்கிறது.

இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த திட்டம்

தற்போதைய சூழலில், தொகுதி மறுவரையறை நடைமுறையில் இருந்து மகளிர் இட ஒதுக்கீட்டைத் தனியாகப் பிரித்து, முதற்கட்டமாக இடங்களின் எண்ணிக்கையை உயர்த்த அரசு திட்டமிட்டுள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

பெண்களுக்கு 273 இடங்கள்

முதற்கட்டமாக மகளிர் இடஒதுக்கீட்டை தனியாக பிரித்து எண்ணிக்கையை அதிகப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளது .இந்தத் திட்டத்தின்படி, தற்போதைய மக்களவை இடங்களின் எண்ணிக்கை 816-ஆக உயரும்.

அதே வேலையில் இதில் 33 சதவீத இட ஒதுக்கீட்டின் கீழ் பெண்களுக்கு 273 இடங்கள் ஒதுக்கப்படும் துன்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in