India Squad Announcement for Australia Tour 2025 https://x.com/BCCI
இந்தியா

ஆஸி. தொடருக்கான இந்திய அணி: கேப்டனாக சுப்மன் கில் நியமனம்

India Squad Announcement for Australia Tour 2025 : ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாட இருக்கும் இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Kannan

India Squad Announcement for Australia Tour 2025 : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. அகமதாபாத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் ஆட்டத்தில், இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவு செய்தது. பேட்டிங் மற்றும் பவுலிங்கிலும் அசத்திய இந்திய வீரர்கள், வெஸ்ட் இண்டீசை மிரட்டினர்.

இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் :

வெஸ்ட் இண்டீஸ் தொடரை அடுத்து ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அக்டோபர் நவம்பர் மாதங்களில் 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட கிரிக்கெட் தொடரில் இந்தியா விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணி(India vs Australia ODI Squad Announcement) அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய அணி - கேப்டன் கில்

தற்போது டெஸ்ட் அணிக்கான கேப்டனாக செயல்பட்டு வரும் இளம் வீரர் சுப்மன் கில், ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான அணிக்கும் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். டெஸ்ட் மற்றும் டி20 கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற ரோகித் ஷர்மா, ஒருநாள் கிரிக்கெட் அணிக்கான கேப்டனாக செயல்பட்டு வந்தார். ஆனால், ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் ரோகித் இடம்பிடித்த நிலையில், கில்லுக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, விராட் கோலி, ஸ்ரேயாஷ் ஐயர் ஆகியோரும் அணியில் இடம்பிடித்துள்ளனர்.

சுப்மன் கில் தலைமையில் ஒருநாள் அணி (India vs Australia ODI Squad Announcement) :

ரோகித் ஷர்மா

விராட் கோலி

ஸ்ரேயாஷ் ஐயர் (துணை கேப்டன்)

அக்சர் படேல்

கேஎல் ராகுல் (விக்கெட் கீப்பர்)

நிதிஷ்குமார் ரெட்டி

வாஷிங்டன் சுந்தர்

குல்தீப் யாதவ்

ஹர்ஷித் ரானா

முகமது சிராஜ்

அர்ஷ்தீப் சிங்

பிரசித் கிருஷ்ணா

துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்)

ஜெய்ஸ்வால்

டி20 இந்திய அணி அறிவிப்பு(India vs Australia T20 Squad Announcement)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியும் அறிவிக்கப்பட்டுள்ளது. சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சூர்யகுமார் யாதவ் (கேப்டன்)

அபிஷேக் ஷர்மா

சுப்மன் கில் (துணை கேப்டன்)

திலக் வர்மா

நிதிஷ்குமார் ரெட்டி

ஷிவம் துபே

அக்சர் படேல்

ஜிதேஷ் ஷர்மா (விக்கெட் கீப்பர்)

வருண் சக்ரவர்த்தி

பும்ரா

அர்ஷ்தீப் சிங்

குல்தீப் யாதவ்

ஹர்ஷித் ரானா

சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்)

ரிங்கு சிங்

வாஷிங்டன் சுந்தர்

மேலும் படிக்க : 2.5 நாளில் வெஸ்ட் இண்டீசை சுருட்டிய இந்தியா : இன்னிங்ஸ் வெற்றி