2.5 நாளில் வெஸ்ட் இண்டீசை சுருட்டிய இந்தியா : இன்னிங்ஸ் வெற்றி

India vs West Indies Test Series 2025 Match Highlights : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில், 140 ரன்கள் வித்தியாசம், இன்னிங்ஸ் வெற்றியுடன் இந்தியா அசத்தியது.
India stunned the West Indies with an innings victory by 140 runs in the first Test match.
India stunned the West Indies with an innings victory by 140 runs in the first Test match.https://x.com/BCCI
2 min read

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர் :

India vs West Indies Test Series 2025 Match Highlights : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தனது மண்ணில் இந்தியா 2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி, முதல் போட்டி நேற்று முன்தினம் அகமதாபாத்தில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் செய்தது. இந்திய அணியின் தரமான பந்து வீச்சில் அந்த அணி முதல் இன்னிங்சில் 162 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக ஜஸ்டின் க்ரிவ்ஸ் 32 ரன்கள் எடுத்த நிலையில் இந்தியாவுக்கு அதிகபட்சமாக முகமது சிராஜ் 4, ஜஸ்பிரித் பும்ரா 3, குல்தீப் 2 விக்கெட்டுகள் எடுத்தனர்.

இந்தியா அசத்தலான ஆட்டம் :

அடுத்து விளையாடிய இந்திய கிரிக்கெட் அணிக்கு 68 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்த ஜெய்ஸ்வால் 36 ரன்களில் அவுட்டானார். கேஎல் ராகுல் அரை சதம் கடந்த நிலையில், சுதர்சன் 7 ரன்னில் அவுட் ஆனார். கேப்டன் சுப்மன் கில்(Shubman Gill) அரை சதமடித்து 50 ரன்களில் அவுட்டானார். மிடில் ஆர்டரில் ஜோடி சேர்ந்த துருவ் ஜுரேல் – ரவீந்திர ஜடேஜா 206 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து இந்தியாவை வலுப்படுத்தினர். அதில் தனது முதல் சதத்தை அடித்த ஜுரேல் 125, ரவீந்திர ஜடேஜா 104* ரன்கள் விளாசினர். அப்போது 448/5 ரன்கள் அடித்த இந்தியா 2வது நாள் முடிவுடன் தங்களது ஆட்டத்தை முடித்துக் கொள்வதாக அறிவித்தது. இந்திய அணி வெஸ்ட் இண்டீஸை விட 286 ரன்கள் முன்னிலை பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் மோசமான ஆட்டம்

2வது இன்னிங்சை விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முன்பை விட மோசமாக பேட்டிங்(India vs West Indies Test Match Highlights) செய்து 146 ரன்களுக்கு சுருண்டது. இந்திய அணியில் ரவீந்திர ஜடேஜா 4, முகமது சிராஜ் 3, குல்தீப் யாதவ் 2 விக்கெட்டுகள் எடுத்தனர். இதன்மூலம் 2.5 நாட்களில் இன்னிங்ஸ் மற்றும் 140 ரன்கள் வித்தியாசத்தில் பெரிய வெற்றியைப் பெற்ற சுப்மன் கில் தலைமையிலான இளம் இந்தியா 1 – 0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

23 ஆண்டுகளில் தோல்வியை சந்திக்காத இந்தியா

2002ம் ஆண்டுக்கு பின் தொடர்ந்து 23வது வருடமாக வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக ஒரு டெஸ்ட் போட்டியில் கூட தோற்காமல் இந்தியா வெற்றி நடை போடுகிறது. இந்தக் காலகட்டங்களில் 25 போட்டிகளில் வெஸ்ட் இண்டீஸை எதிர்கொண்ட இந்தியா 14 வெற்றிகளையும் 11 ட்ராவையும் பதிவு செய்துள்ளது.

மேலும் படிக்க : 1,747 பந்துகள்! 50 விக்கெட்டுகள்!: ஜஸ்பிரித் பும்ரா அசத்தலான சாதனை

கைகொடுத்த அனுபவம், முதிர்ச்சி

அனுபவம் இல்லாத வெஸ்ட் இண்டீஸ் பவுலர்கள் கைவலிக்க பந்து வீசினாலும் எந்த பலனும் கிடைக்கவில்லை. அதேசமயம், நல்ல பார்மில் உள்ள இந்திய பேட்டர்கள் ஒரு பக்கம் அடித்து நொறுக்க, துல்லியமாக பந்து வீசிய பவுலர்கள், இந்திய அணிக்கு பெரும் வெற்றியை தேடித் தந்தனர்.

==============

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in