Indian Parliament Canteen Nutritious Foods Menu 2025 Price List 
இந்தியா

நாடாளுமன்ற கேன்டினில் ஆரோக்கிய உணவுகள் : சிறுதானிய இட்லி, தோசை

Indian Parliament Canteen Foods Menu 2025 : டெல்லி நாடாளுமன்றத்தில் உள்ள உணவகத்தில் ஊட்டச்சத்துகள் நிறைந்த உணவுகளை எம்பிகளுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

Kannan

நாடாளுமன்ற உணவகம் :

Indian Parliament Canteen Foods Menu 2025 : டெல்​லி​யில் உள்ள புதிய நாடாளு​மன்ற வளாகத்​தில் உறுப்​பினர்​கள், ஊழியர்​கள் மற்​றும் பார்​வை​யாளர்​களுக்​காக உணவகம் செயல்​பட்டு வரு​கிறது. இங்கு பல்வேறு வகையான உணவுகள் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகின்றன. கூட்டத்தொடர் நடைபெறும் போது இங்கு உணவு சாப்பிட பிரதமர் நரேந்திர மோடி(PM Modi) முதல் உறுப்பினர்கள் வரை அனைவரும் ஆர்வம் காட்டுவர்.

சத்தான உணவு வகைகள் சேர்ப்பு :

மக்​கள​வைத் தலை​வர் ஓம் பிர்​லா​வின் வேண்​டு​கோளின்​படி, சுவையை தியாகம் செய்​யாமல் உடல் ஆரோக்​கி​யத்தை காக்​கும் வகை​யில் புதிய உணவு வகைகள் உணவகத்தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளன. சுவை​யான கறிகள் மற்​றும் விரி​வான தாளிகளு​டன்(Parliament Canteen Foods) சிறு​தானி​யங்​களை அடிப்​படை​யாகக் கொண்ட உணவு​கள், நார்ச்​சத்து நிறைந்த சாலடு​கள் மற்​றும் புரதம் நிறைந்த சூப்​களும் வழங்​கப்​படு​ம் என்று தெரிவிக்கப்படுள்ளது.

உறுப்பினர்களின் உடல் நலத்திற்கு முன்னுரிமை :

ஒவ்​வொரு உணவும் குறை​வான கார்​போஹைட்​ரேட், சோடி​யம் மற்​றும் கலோரி​களைக் கொண்​ட​தாக​ இருக்கும். அதேசமயம் அத்​தி​யா​வசிய ஊட்​டச்​சத்து நிறைந்​த​தாக​வும்(Nutritious Foods) இருக்​கும் வகை​யில் கவன​மாக திட்​ட​மிட்டு தயாரிக்கப்படும். ​ராகி சிறு​தானிய இட்​லி, சோள உப்​பு​மா, பாசிப்​பருப்பு தோசை மற்​றும் காய்​கறிகளு​டன் கூடிய வறுத்த மீன்(Fried Fish) உள்​ளிட்ட ஊட்​டச்​சத்​தான உணவுகள் தயாரித்து விற்பனை செய்யப்படும்.

சிறுதானிய உணவு வகைகள் :

பிரதமர் நரேந்திர மோடியின் கோரிக்கையை ஏற்று 2023ம் ஆண்டை சர்​வ​தேச சிறு​தானிய ஆண்​டாக(International Year of Millets) ஐ.நா.சபை அறி​வித்​தது. இதையடுத்து சிறு​தானி​யங்​களுக்​கு முக்​கி​யத்​து​வம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதை பின்பற்றும் வகையில் நாடாளுமன்ற உணவகத்திலும்(Parliament Canteen) ஆரோக்கிய உணவுகள் வழங்கப்பட உள்ளன.

21ம் தேதி முதல் நாடாளுமன்ற கூட்டம் :

வரும் 21ம் தேதி நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் தொடங்குகிறது. அப்போது, மேலே குறிபிட்ட சத்தான சிறுதானிய உணவு வகைகள் விற்பனை செய்யப்படும். எம்பிக்கள் தெரிவிக்கும் யோசனையின் அடிப்படையில் தேவைப்படும் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் படிக்க : நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் : ஜூலை 21ல் தொடக்கம்

=====