India's First Poverty Free State Kerala To Be Declared on November 1 2025 
இந்தியா

Kerala : வறுமை இல்லாத மாநிலமாகிறது கேரளா : நவம்பர் 1ல் அறிவிப்பு

India's First Poverty Free State Kerala Declared on November 1 2025 : வறுமை இல்லாத இந்தியாவின் முதல் மாநிலம் என்ற பெருமையை பெறுகிறது நமது அண்டை மாநிலமான கேரளா.

Kannan

வறுமையை ஒழித்த கேரளா

Kerala Become "Poverty Free State in India" : இயற்கை எழில் கொஞ்சும் கேரள மாநிலம், சங்க காலத்தில் சேர நாடாக இருந்தது. பூவுலகின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் கேரள மாநிலம் எழுத்தறிவில் 100 சதவீதம் என்ற இலக்கை, பல ஆண்டுகளுக்கு முன்பே எட்டி சாதித்தது.

தீவிர வறுமை ஒழிப்பு திட்டம்

கேரளாவில் பினராயி விஜயன் தலைமையில் இடதுசாரி ஜனநாயக முன்னணி (LDF) ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பொறுப்பற்றவுடன் அமைச்சரவையின் முதல் முடிவுகளில் ஒன்றாக, தீவிர வறுமை ஒழிப்புத் திட்டம் 2021(Extreme Poverty Alleviation Program)ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

ஏழை மக்களுக்கான சிறப்பு திட்டங்கள்

நிதி ஆயோக்கின் 2021ம் ஆண்டு ஆய்வின்படி, மொத்த மக்கள் தொகையில் 0.7% வறுமை விகிதத்துடன் நாட்டில் மிகக் குறைந்த வறுமை விகிதத்தைக் கொண்ட மாநிலமாக கேரளா இருந்தது. அந்த மக்களை நலத் திட்டங்கள் சென்றடைவதிலும், அவர்களின் தேவைகளை நிறைவு செய்வதிலும் மாநில அரசு முழு கவனம் செலுத்தியது. இதற்கு உரிய பலன் கிடைத்து இருக்கிறது. இதன்மூலம், வறுமை இல்லாத மாநிலமாக கேரளா உருவெடுத்து, இந்தியாவின் முதல் மாநிலம் என்ற சாதனையை படைத்து உள்ளது.

தேவைகளை நிறைவேற்றி சாதனை

உணவு, உடல் நலன், வாழ்வாதாரம் மற்றும் தங்குமிடம் போன்ற காரணிகளின் அடிப்படையில் மாநிலம் முழுவதும் உள்ள 64,006 குடும்பங்கள் தீவிர வறுமைக் கோட்டின் கீழ் இருப்பதை அதிகாரிகள் அடையாளம் கண்டனர். வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத, ரேஷன் அட்டை அல்லது ஆதார் அட்டை கூட இல்லாத விளிம்புநிலை மக்கள் பலரும் இந்தப் பட்டியலில் இடம்பெற்று இருந்தார்கள்.

கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றம்

ஒவ்வொரு குடும்பத்தின் உடனடி மற்றும் நீண்ட காலத் தேவைகள் பட்டியலிடப்பட்டு, அதற்கு ஏற்ப சிறு திட்டங்கள் (Micro plans) தயாரிக்கப்பட்டன. முதல்கட்டமாக, அத்தியாவசிய ஆவணங்கள் இல்லாத 21,263 தனிநபர்களுக்கு அவை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

3,913 குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்பட்டன. 1,338 குடும்பங்களுக்கு நிலம் ஒதுக்கப்பட்டது.5,651 குடும்பங்களுக்கு வீடுகளைப் புதுப்பிக்க தலா 2 லட்சம் வரை உதவி அளிக்கப்பட்டது. வறுமை ஒழிப்பு முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டது.

2021ம் ஆண்டு ஆய்வில் அடையாளம் காணப்பட்ட 64,006 குடும்பங்களில், 4,421 தனிநபர்கள் ( ஒற்றை உறுப்பினர் குடும்பங்களாக கருதப்பட்டவர்கள்) இடைப்பட்ட ஆண்டுகளில் இறந்து விட்டனர். விரிவான தேடல்கள், தொடர்புகள் மற்றும் முயற்சிகளுக்குப் பிறகும், நாடோடிகளாக வாழ்ந்த 261 குடும்பங்களைக் கண்டறிய முடியவில்லை. இவர்கள் மற்ற மாநிலங்களுக்கு குடிபெயர்ந்து விட்டார்கள். திரும்பி வந்தால், உதவிகளை வழங்க அரசு காத்திருக்கிறது.

59,000 குடும்பங்கள் வறுமையில் இருந்து மீட்பு

4,729 குடும்பங்களைத் தவிர்த்து, மீதமுள்ள 59,277 குடும்பங்கள் தீவிர வறுமையிலிருந்து மீட்கப்பட்டு விட்டார்கள். பொதுமக்களுக்கான அனைத்து அரசு உதவிகள், சேவைகள் பரலாக்கப்பட்டு, ஒருங்கிணைப்பு, சிறப்பு திட்டங்கள் மூலமாக வறுமையை ஒழித்த மாநிலம் என்ற சாதனையை கேரளா படைத்து இருக்கிறது.

மேலும் படிக்க : Kerala: கிராமமே தயாரிக்கும் திரைப்படம்: பொதுமக்களே கதாபாத்திரங்கள்

கைகொடுக்க எதிர்க்கட்சிகள்

இதில் எதிர்க்கட்சிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பங்களிப்பு மகத்தானது. கூட்டு முயற்சியால் இந்த வெற்றியை கேரளா ஈட்டி இருக்கிறது. நவம்பர் ஒன்றாம் தேதி தலைநகர் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன்(Pinarayi Vijayan Announcement of Kerala as Poverty Free State) தலைமையில் சிறப்பு மிகு விழாவில், கேரளா அதிகாரப்பூர்வமாக தீவிர வறுமை இல்லாத மாநிலமாக முறைப்படி அறிவிக்கப்படுகிறது.

======