
இந்தியாவில் கொரோனா பாதிப்புகள்
Palakkad Elappully Village Producing Film in Kerala : கொரோனா காலத்தில் மக்கள் சந்தித்த சிரமங்களை சொல்லி மாளாது. இதில் பாதிக்கப்படாத மக்களே இல்லை என்பது தான் உண்மை. கொரோனா ஊரடங்கு, வேலைக்கு சென்றால் கொரோனா தொற்று, வீடுகளுக்கும் முடங்கி கிடப்பது என மக்கள் சந்தித்த சிரமங்கள் ஏராளம்
கிராம மக்கள் தயாரிக்கும் திரைப்படம்
அந்த வகையில் கேரள மாநிலம், பாலக்காடு(Palakkad Elappully) மாவட்டத்தில் அமைந்து உள்ளது எலப்புள்ளி கிராமம். கொரோனா காலத்தில் எலப்புள்ளியில் சந்தித்த நிகழ்வுகளை மையப்படுத்தி, 50 லட்சம் ரூபாய் பட்ஜெட்டில் கிராம மக்கள் ஒன்று சேர்ந்து திரைப்படம் ஒன்றை எடுக்கின்றனர்.
கிராம மக்களே கதாபாத்திரங்கள்
கிராமத்தின் அழகிய வயல்வெளிகள், இயற்கை காட்சிகளை படமாக்கி, கிராமத்தைச் சேர்ந்தவர்களே கதாபாத்திரங்களாக நடித்து வருகிறார்கள். இந்தப் படத்தின் படப்பிடிப்பு எலப்புள்ளி(Elappully Village in Kerala) மற்றும் நெய்தலை பகுதியில் உள்ள வீடுகள், விவசாய நிலங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கண்களுக்கு விருந்தளிக்கும் இயற்கை காட்சிகள் திரைப்படத்தில் இடம்பெறுகின்றன.
தயாரிப்பு பணிகள் மும்முரம்
திரைப்பட தயாரிப்பு பணிகளை, எலப்புள்ளி பகுதியைச் சேர்ந்த மலையாள சினிமாவின் இளம் ஒளிப்பதிவாளரும் விவசாயியுமான தனேஷ் ரவீந்திரநாத் மற்றும் அவரது மனைவி அகிலேஷ்வரி ஆகியோர் மேற்கொண்டு வருகின்றனர். இவர்களுக்கு சொந்தமான சூரியகாந்தி வயல் மற்றும் செண்டு மல்லி சாகுபடி நிலங்களில் படப்பிடிப்பு நடக்கிறது.
கதாநாயகனாக சிறுவன் ’சனோ’
இந்தப் படப்பிடிப்பு பற்றி கூறிய தனேஷ், “திரைப்படத்தில் நடிக்கும் கிராம மக்களுக்கு நடிப்பு பயிற்சியாளர் குமார்தாஸ் பயிற்சி கொடுத்து இருக்கிறார். நெய்தலை பகுதியை சேர்ந்த நான்காம் வகுப்பு மாணவனான ’சனோ’ தான்(Elappully Villagers Movie Production Cast & Crew) படத்தின் கதாநாயகன். கதாநாயகியாக எலப்புள்ளி தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கும் எனது மகள் தக்சரா நடிக்கிறார்.
மேலும் படிக்க : மலையாளத்தில் "முதன்முறையாக 300 கோடி" : வசூலில் மிரட்டும் ‘லோகா’
விவசாயிகள், தொழிலாளிகள் நடிப்பு
கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள் திரைப்படத்தின் கதாபாத்திரங்களில் சிறப்பாக நடித்து வருகிறார்கள். படத்தின் கதை மற்றும் திரைக்கதையை எழுதி எனது மனைவி அகிலேஷ்வரி இயக்குகிறார். படத்துக்கு இன்னும் பெயரிடப்படவில்லை” என்று தனேஷ் தெரிவித்தார்.
===============