காஷ்மீரில் மேக வெடிப்பு :
Jammu Kashmir Cloudburst Today Update in Tamil : வட மாநிலங்களில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. ஜார்க்கண்ட், காஷ்மீர் மாநிலங்களில் பலத்த மழை கொட்டி வருகிறது. காஷ்மீரின் கிஷ்த்வார் மாவட்டத்தில் நேற்று மேகவெடிப்பு காரணமாக எதிர்பாராத அளவு கனமழை கொட்டித் தீர்த்தது. எதிர்பாராத பெரு மழையால், தீடீர் வெள்ளப் பெருக்குடன் நிலச்சரிவும் ஏற்பட்டது.
கிராம மக்கள் 60 பேர் பலி :
சோசிட்டி என்ற மலை கிராமத்தில் பலர் உயிரிழந்தனர். நேற்று வரை 46 உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், இது இன்று காலை 60 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 46-ஆக உள்ளது. இன்னும் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதுவரையில் மீட்கப்பட்ட 120 பேரில் 38 பேரின் நிலை கவலைக் கிடமாக உள்ளது.
மீட்பு பணிகள் தீவிரம் :
மீட்பு பணிகளில் என்டிஆர்எப், எஸ்டிஆர்எப், காவல்துறை, ராணுவம், உள்ளூர் தன்னார்வலர்கள் ஈடுபட்டுள்ளனர். நிலைமை மோசமாக இருப்பதால் என்டிஆர்எப்-ன் இரண்டு புதிய குழுக்கள் உட்பட மீட்பு பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
நிலச்சரிவில் சிக்கிய பக்தர்கள் :
மச்சைல் மாதா கோயிலுக்கு செல்லும் வழியில் அமைந்துள்ள சோசிட்டி கிராமத்தில் மதியம் 12 மணி முதல் 1 மணிக்குள் இந்த பேரழிவு நிகழ்ந்தது. ஜூலை 25-ம் தேதி தொடங்கிய வருடாந்திர மச்சைல் மாதா யாத்திரை செப்டம்பர் 5-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இதற்காக அங்கு ஏராளமான மக்கள் கூடியிருந்தபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது.
மேலும் படிக்க : உத்தரகண்ட்டில் மேகவெடிப்பு: வெள்ளப்பெருக்கால் பலத்த சேதம்
அடித்து செல்லப்பட்ட கட்டமைப்புகள் :
திடீர் வெள்ளம் காரணமாக கடைகள் மற்றும் பாதுகாப்பு புறக்காவல் நிலையம் உட்பட பல கட்டமைப்புகள் நீரில் அடித்துச் செல்லப்பட்டன. அங்கு இருந்த பொதுமக்களும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
=====