Longest Freight Train Rudrastra in India 
இந்தியா

Rudrastra 354 பெட்டிகள், 4.5 கிமீ நீளம்: சரக்கு ரயிலை இயக்கி சாதனை

Longest Freight Train Rudrastra in India : நாட்டிலேயே மிக நீளமான சரக்கு ரயில் ருத்ராஸ்திரா இயக்கி இந்திய ரயில்வே சாதனை படைத்துள்ளது.

Kannan

இந்திய ரயில்வே :

Longest Freight Train Rudrastra in India : உலகின் பெரிய ரயில் போக்குவரத்து துறையை இந்திய ரயில்வே கையாண்டு வருகிறது. நாள்தோறும் பயணிகளுக்காக ஆயிரக் கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோன்று, நாட்டின் ஒரு பகுதியில் இருந்து மற்றொரு பகுதியை சரக்குகளை கொண்டு செல்லவும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவை இந்தியாவின் ஏற்றுமதி, இறக்குமதி மற்றும் வாணிபத்தில் முக்கிய பங்காற்றி வருகின்றன.

ருத்ராஸ்டிரா' சரக்கு ரயில் :

இந்த நிலையில் மிக நீளமான சரக்கு ரயில் ருத்ராஸ்திரா(Longest Goods Train Rudrastra) இயக்கி ரயில்வேத்துறை சாதனை படைத்து இருக்கிறது. 4 புள்ளி 5 கிலோ மீட்டர் நீளம் கொண்ட இந்த சரக்கு ரயிலில் 354 பெட்டிகள் இணைக்கப்பட்டு இருந்தன, 7 இன்ஜின்கள் கொண்டு இந்த ரயில் இயக்கப்பட்டது.

சோதனை ஓட்டம் வெற்றி :

இதன் சோதனை ஓட்டம்(Rudrastra Test Run) வெற்றிகரமாக நடைபெற்றது. உத்தரபிரதேச மாநிலம் கன்ஜ்க்வாஜா முதல் ஜார்க்கண்டின் தான்பாத் வரையில் இந்த ரயில் பயணித்தது. 200 கிலோ மீட்டர் தூரத்தை சரக்கு ரயில் வெற்றிகரமாக கடந்தது. மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் இந்த ரயில் பயணித்தது. இந்த ரயிலை தனித்தனியாக இயக்கினால் 6 வழித்தடங்கள் தேவைப்படும். அதற்கு ஏற்ற அளவு ஊழியர்களும் பணியாற்ற வேண்டி இருக்கும்.

மேலும் படிக்க : ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் : பெரம்பூர் ICF-ல் வெற்றிகரமாக சோதனை

நீளமான ரயில், நேர விரயம் தவிர்ப்பு :

பெட்டிகளை ஒன்றிணைத்து மிக நீளமான ரயிலாக இயக்குவதால், பெருமளவில் சரக்குகளை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு ஒரே சமயத்தில் கொண்டு செல்லலாம். நேர விரயமும் தவிர்க்கப்படும். ’ருத்ராஸ்டிரா' சரக்கு ரயிலின் வெற்றிகரமான சோதனை(Rudrastra Longest Freight Train) ஓட்ட வீடியோவை ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் 'எக்ஸ்' சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.