பசுமையின் சொர்க்கம் ‘மிசோரம்’ :
PM Modi Mizoram Railway Inauguration Date : இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்று மிசோரம். எங்கு பார்த்தாலும் “பசுமை, பசுமை” இதுவே இதன் அழகு, பச்சை பட்டு உடுத்திய மலைகளின் அடியில், மாணிக்க கல்லை போன்று மிளிர்கிறது மிசோரம். மலைவாழ் மக்களின் தேசமான இது, தனித்துவம் மிக்க பண்பாடு, கலாச்சாரம், அடர்ந்த காடுகள், அரிய வகை உயிரினங்கள் என பெருமைகளை சுமந்து கொண்டு விளங்குகிறது.
தலைநகர் அய்ஸ்வால், ( Aizawl ) செங்குத்தான மலைகளின் உச்சியில் ஒரு கிரீடம் போல கம்பீரமாக திகழ்கிறது. வெறும் 21,081 சதுர கிலோ மீட்டர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த மாநிலம்(Mizoram State), போக்குவரத்து வசதிகள் இல்லாமல் வளர்ச்சியில் பின்தங்கி இருக்கிறது. மாநிலத்திற்கு பயணிக்க வேண்டும் என்றால், ஆபத்தான, குறுகிய மலைச் சாலைகள் தான் வழி.
விமானம் மட்டுமே ஒரே வாய்ப்பு :
மாநிலத்தை விட்டு வெளி இடங்களுக்கு செல்ல வேண்டும் என்றால், ஒரே விமானப் பயணம் மட்டுமே. சாமான்ய மக்களுக்கு இது எட்டா கனவுதான். கல்வி, மருத்துவம், வர்த்தகம் என அனைத்திற்கும் விமான பயணம் எனும் போது, பெரும் நிதிச்சுமையை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர்.மிசோரமில் விளையும் உலகத்தரம் வாய்ந்த அன்னாசி, இஞ்சி, மஞ்சள் மற்றும் ஆர்க்கிட் மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை விவசாயிகள் பாதிக்கப்பட்டு வந்தனர். மிசோரம் மக்களின் 75 ஆண்டு கனவு, தரைவழிப் போக்குவரத்து. இதை நடைமுறைபடுத்தி காட்டி இருக்கிறது, மத்திய பாஜக அரசு. மாநிலத்தின் தலைவிதியை மாற்றும் வகையில், பைராபி-சாய்ராங் இடையே ரயில் பாதை அமைக்கப்பட்டு நாட்டின் பிற மாநிலங்களுடன் மிசோரமை தரை வழியாக இணைத்து இருக்கிறது மத்திய அரசு.
’ரூ.8,000 கோடி’யில் ரயில்பாதை :
8,000 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக இந்த திட்டம் செயல்படுப்பட்டது(Mizoram Railway Line Project). மலைகளை குடைந்து இருப்பு பாதை, உயர்மட்ட பாலங்கள் என ஒவ்வொரு அடியும் சவால் தான். 51.38 கி.மீ. தூரத்துக்கு ரயில்பாதை, வழியில் 48 சுரங்கங்கள், பாறைகளைக் குடைந்து சுரங்கப்பாதை, பள்ளத்தாக்குகளை இணைக்க 55 பெரிய பாலங்கள், 87 சிறிய பாலங்கள், 196ம் எண்ணுள்ள ஒரு பாலத்தின் உயரம் மட்டும் 114 மீட்டர்,டெல்லி குதுப்மினாரை விட 42 மீட்டர் உயரமானது, இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.
சவால் நிறைந்த பயணம் :
பைராபி-சாய்ராங் இடையேயான ரயில்பாதை(Bairabi to Sairang Railway Line) தடத்தில் பயணிப்பது சிறந்த அனுபவமாக இருக்கும். அடர்ந்த காடுகள், நதிகள், சுரங்கங்கள், பள்ளத்தாக்குகள் என இயற்கையின் முழு அழகையும் ரசித்தவாறே செல்லலாம். நவம்பர் முதல் மார்ச் வரை பயணம் செய்வது சிறந்தது. ஏனென்றால், ஏப்ரல் முதல் அக்டோபர் வரை கடும் மழைக்காலம்.
ரயில்வே சாதனையில் மைல்கல் :
கடினமான இந்த திட்டம் குறித்து விவரித்த ரயில்வே அதிகாரிகள், “ இதற்குமுன்பு அசாம் மாநில எல்லையில் உள்ள பைராபி வரை மட்டுமே ரயில் பாதை(Assam To Bairabi Railway Line) இருந்தது. அங்கிருந்து சாலை வழியாக ஐஸ்வால் செல்ல 12 மணி நேரம் ஆகும். ரயில் போக்குவரத்தால் பயண நேரம் வெகுவாக குறையும், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பு, சரக்குகளை எளிதாக வெளி மாநிலங்களுக்கு எடுத்து செல்லுதல் போன்றவற்றுக்கு ரயில் போக்குவரத்து பயன்படும். சுரங்கங்களில் ஜல்லிக்கற்கள் இல்லாத ரயில்பாதை அமைக்கப்பட்டு இருப்பதால் பராமரிப்பு தேவையில்லை.
இந்த பாதையில் ரயில் சேவையை வரும் 13ம் தேதி மிசோரம் மக்களுக்கு அர்ப்பணிக்கிறார் பிரதமர் நரேந்திர மோடி(PM Modi Mizoram Railway Inauguration Date). தினமும் இந்த வழித்தடத்தில் 2 அல்லது 3 ரயில்கள் இயக்கப்படும். வருங்காலத்தில் தேவைக்கேற்ப ரயில்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்” என்று கூறினர்.
சாதித்து காட்டிய தமிழக வல்லுனர்கள் :
மிசோரம் ரயில்(Mizoram Railway) பாதை திட்டத்தில் தமிழ்நாட்டின் பங்களிப்பு அளப்பரியது. தமிழக தொழில்நுட்ப வல்லுநர்கள், கட்டுமான பொருட்கள் கொள்முதல், சுரங்கப் பாதை அமைக்கும் பணி, தூண்கள் அமைக்கும் பணி என தங்கள் பங்களிப்பை அளித்து இருகிறார்கள். ரயில் பாதை வரைபடம் தயாரிக்கும் பணி, சிக்னல், தகவல் தொடர்பு பணிகளில் தமிழக வல்லுனர்கள் தனது பங்களிப்பை செய்து இருக்கிறார்கள்.
கனவை நிறைவேற்றிய மத்திய அரசு :
2030க்குள் வடகிழக்கின் அனைத்து மாநிலத் தலைநகரங்களையும் தேசிய இருப்புப் பாதை அமைப்புடன் இணைக்க வேண்டும் என்பதே மத்திய பாஜக அரசின் இலக்கு. அசாம், திரிபுரா, அருணாச்சலப் பிரதேசம் மற்றும் தற்போது மிசோரம் ஆகிய மாநிலங்கள் இணைக்கப்பட்டுள்ள நிலையில், மணிப்பூர், (ஜிரிபாம்-இம்பால் திட்டம்), நாகாலாந்து (தன்சிரி-சுப்ஸா திட்டம்), சிக்கிம் (சிவோக்-ரங்போ திட்டம்), மற்றும் மேகாலயா (அஸ்ரா-பைர்னிஹாட் திட்டம்) ஆகிய மாநிலங்களையும் இணைக்கும் பணிகள் நிறைவு பெற்றால் அது புதிய மைல்கல்லாக அமையும்.
மேலும் படிக்க : PM Modi: ’ஜப்பான்-இந்தியா தொழில்நுட்ப புரட்சி’: பிரதமர் மோடி உறுதி
வளர்ச்சி பாதையில் வடகிழக்கு மாநிலங்கள் :
இதன் மூலம் வடகிழக்கு மாநிலங்களில் விளையும் பொருட்கள், இந்தியாவின் எந்த மூலையையும் எளிதில் சென்றடையும். சுற்றுலா மேம்பாடு அடையும். கல்வி, வாழ்க்கைத்தரம் உயர்வு, வேலை வாய்ப்பு என அனைத்திலும் வடகிழக்கு மாநில மக்களும் ஏற்றம் பெறுவார்கள்.
============