PM Modi: ’ஜப்பான்-இந்தியா தொழில்நுட்ப புரட்சி’: பிரதமர் மோடி உறுதி

PM Narendra Modi Japan Visit : ஜப்பானின் தொழில்நுட்பமும் இந்தியாவின் திறமையும் இணைந்lதால், தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும் என்று, பிரதமர் மோடி தெரிவித்து இருக்கிறார்.
PM Narendra Modi Japan Visit
PM Narendra Modi Japan Visithttps://x.com/narendramodi?
1 min read

ஜப்பானில் பிரதமர் மோடி :

PM Narendra Modi Japan Visit : அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தலைநகர் டோக்கியோவில் வசிக்கும் இந்தியர்கள் அவரை அன்பாக வரவேற்று உபசரித்தனர்.

3வது பொருளாதார நாடு இந்தியா :

இந்தியா - ஜப்பான் பொருளாதாரமன்ற கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி(PM Modi Speech in Japan), ” இந்தியா விரைவில் மூன்றாவது பெரிய பொருளாதாரம் கொண்ட நாடாக மாறும். ராணுவம், விண்வெளி துறையில் தனியார் பங்களிப்பு ஊக்குவிக்கப்படுகிறது. இந்தியாவில் பொருளாதாரம் மற்றும் அரசியலில் நிலைத்தன்மை நிலவுகிறது.

ஜப்பானிடம் நெருங்கிய நல்லுறவு :

ஜப்பான் நாட்டின் வணிகத்திற்கு இந்தியா தேவையான ஊக்கத்தை அளித்து வருகிறது(India Japan Relations). ஏஐ, செமி கண்டக்டர், குவாண்டம் கம்ப்யூட்டிங், பயோடெக் மற்றும் விண்வெளி துறை ஆகியவற்றில் இந்தியா துணிச்சலான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

தொழில்நுட்ப புரட்சி உறுதி :

ஜப்பானின் தொழில் நுட்பமும், இந்தியாவின் திறமையும் இணைந்தால், சிறப்பான கூட்டாண்மையை உருவாக்க இயலும். இதன் மூலம் இந்த நூற்றாண்டில் தொழில்நுட்ப புரட்சியை ஏற்படுத்த முடியும்.” இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.

உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார் :

இதைத்தொடர்ந்து இந்தியா - ஜப்பான் 15வது உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்கிறார்(India Japan 15th Summit). அந்நாட்டு பிரதமருடன் மோடி பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார். இந்தியா மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்துள்ள நிலையில், மாற்று வழிகள் குறித்து இந்த சந்திப்பில் ஆலோசிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

ஷாங்காய் உச்சி மாநாடு :

நாளை சீனா செல்லும் பிரதமர் மோடி ஷாங்காய் உச்சி மாநாட்டில்(PM Modi in Shanghai Summit 2025) கலந்து கொள்கிறார். சீன அதிபர் ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதின் ஆகியோரையும் அவர் சந்தித்து பேசுகிறார். அமெரிக்காவின் மிரட்டலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், இந்தியா-ரஷ்யா-சீனா கைகோர்க்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

===========

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in