PM Narendra Modi Wishes National Space Day 2025 
இந்தியா

’National Space Day’ ஆண்டுக்கு 50 ராக்கெட்கள்: பிரதமர் மோடி உறுதி

PM Narendra Modi Wishes National Space Day 2025 : 5 ஆண்டுகளில், ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை ஏவும் நிலையை இந்தியா அடைய வேண்டும் என்று, பிரதமர் மோடி, இலக்கு நிர்ணயித்து இருக்கிறார்

Kannan

தேசிய விண்வெளி தினம் :

PM Narendra Modi Wishes National Space Day 2025 : தேசிய விண்வெளி தினம் ஆகஸ்டு 23ம் தேதியான இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் காணொலி மூலம் பிரதமர் மோடி உரை நிகழ்த்தினார்.

இளைஞர்களிடையே உற்சாகம் :

“அனைவருக்கும் தேசிய விண்வெளி தின வாழ்த்துக்கள்(National Space Day 2025 Wishes). இந்த தினம் நமது இளைஞர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது. இது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விஷயம். விண்வெளி துறையில் இளைஞர்களுக்கு ஆர்வத்தை அதிகரிக்க இஸ்ரோ(ISRO) சவால் நிறைந்த பல முயற்சிகளை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன்.

5 ஆண்டுகளில் சிறந்த நிறுவனங்கள் :

தேசிய விண்வெளி தினத்தை(National Space Day 2025 Date) முன்னிட்டு, விண்வெளி ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு நான் ஒரு கோரிக்கை விடுக்கிறேன். அடுத்த 5 ஆண்டுகளில் விண்வெளி துறையில் ஐந்து சிறப்பு வாய்ந்த ஸ்டார்ட்அப் நிறுவனங்களை உருவாக்க முடியுமா?

ஆண்டுக்கு 50 ராக்கெட்டுகள் :

இப்போது இந்தியாவில் இருந்து ஒவ்வொரு ஆண்டும் 5 ராக்கெடுகள் மூலம் செயற்கைக்கோள்கள் ஏவப்படுகின்றன. இதில் தனியார் துறையின் பங்கு இருக்க வேண்டும். அடுத்த 5 ஆண்டுகளில் நாம் ஒவ்வொரு ஆண்டும் 50 ராக்கெட்டுகளை விண்ணுக்கு ஏவக் கூடிய நிலையை அடைய வேண்டும் என்று நான் விரும்புகிறேன்.

வாரம்தோறும் ராக்கெட் ஏவ வேண்டும் :

ஒவ்வொரு வாரமும் ஒரு ராக்கெட்டை நாம் ஏவ வேண்டும். இன்று, விண்வெளி தொழில்நுட்பமும் இந்தியாவின் வளர்ச்சியில் முக்கியமான ஒன்றாக மாறி வருகிறது. செயற்கைக்கோள்கள் மூலம் கிடைக்கும் தகவல்கள் மீனவர்களுக்கு வழங்கப்படுகிறது. விண்வெளித் துறையில் தொடர்ந்து புதிய மைல்கற்களை அடைவது இந்தியா மற்றும் இந்திய விஞ்ஞானிகளின் இயல்பாகி விட்டது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சந்திரனின் தென் துருவத்தை அடைந்து வரலாற்றைப் படைத்த முதல் நாடாக இந்தியா மாறியது.

மேலும் படிக்க : நிருபராக கேள்விகள் கேட்ட மோடி : அசத்தலாக பதிலளித்த சுபான்ஷு சுக்லா

விண்வெளி மையத்தில் மூவண்ணக் கொடி :

சர்வதேச விண்வெளி நிலையத்தில்(International Space Station) மூவண்ணக் கொடியை ஏற்றி விரைவில் இந்தியாவின் விண்வெளி வீரர் குழுவையும் நாங்கள் தயார் செய்யப் போகிறோம். எனவே, இந்தியாவின் கனவுகளில் இளைஞர்களும் பங்கேற்று, விண்வெளி வீரர் குழுவில் சேர ஆர்வம் காட்ட வேண்டும். இளம் விஞ்ஞானிகளின் கடும் உழைப்பால் விரைவில் இந்தியா தனக்கென தனியாக விண்வெளி மையம் ஒன்றை கட்டமைக்க இருக்கிறது” இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி(Narendra Modi) பேசினார்.

===============