நிருபராக கேள்விகள் கேட்ட மோடி : அசத்தலாக பதிலளித்த சுபான்ஷு சுக்லா

Shubhanshu Shukla PM Modi Meeting Update : விண்வெளி நாயகன் சுபான்ஷு சுக்லா பிரதமர் மோடியை சந்தித்து அவரது கேள்விகளுக்கு சிறப்பான பதில்களை அளித்தார்.
Indian Astronaut Shubhanshu Shukla PM Narendra Modi Meeting Update
Indian Astronaut Shubhanshu Shukla PM Narendra Modi Meeting UpdateANI
2 min read

பிரதமர் மோடியுடன் சுபான்ஷு சுக்லா சந்திப்பு :

Shubhanshu Shukla PM Modi Meeting Update : விண்வெளி வரலாற்றில் இந்தியாவின் பெயரை பொறித்த சுபான்ஷு சுக்லா, சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான(ISS) பயணத்தை வெற்றிகரமாக முடித்து பூமிக்கு திரும்பினார். தற்போது இந்தியா வந்துள்ள அவர் பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். விண்வெளி பயணம், அதன் அனுபவங்களை பிரதமரிடம் சுபான்ஷு எடுத்துரைத்தார்.

இந்த சந்திப்பின் போது மோடி(PM Modi Questions Shubhanshu Shukla) எழுப்பிய கேள்விகளுக்கு அவர் பதிலளித்து அசத்தினார். அவற்றின் விவரம் :

பிரதமர் மோடி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்ற முதல் இந்தியரான நீங்கள். அதை எவ்வாறு உணருகிறீர்கள்? மக்கள் உங்களிடம் கேட்கும் கேள்விகள் என்ன?

ககன்யான் பற்றியே பேச்சு :

சுபன்ஷு சுக்லா: நான் எங்கு சென்றாலும், யாரைச் சந்தித்தாலும், எல்லோரும் என்னைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைந்தனர், மிகவும் உற்சாகமடைகின்றனர். இதில் முக்கியமான விஷயம், விண்வெளித் துறையில் இந்தியா என்ன செய்து கொண்டிருக்கிறது என்பது அனைவருக்கும் தெரியும். பலரும் ககன்யான் பற்றி அதிகமாக கேட்கின்றனர். விண்வெளி நிலையத்தில் என்னுடன் இருந்தவர்கள், ககன்யான் திட்டம் செயல்படுத்தப்படும்போது, அந்த நிகழ்வுக்கு அழைப்பதற்கான எழுத்துப்பூர்வ வாக்குறுதியை இப்போதே கொடுங்கள் என வலியுறுத்தினர்.

பிரதமர் மோடி: நீண்ட விண்வெளிப் பயணத்தை முடித்துக்கொண்டு திரும்பி வந்த பிறகு நீங்கள் என்ன மாற்றத்தை உணர்கிறீர்கள்?

விண்வெளியில் கடினமான சூழல் :

சுபன்ஷு சுக்லா: விண்வெளி நிலைய சூழல் மிகவும் வித்தியாசமானது. விண்வெளியை அடைந்தவுடன், சீட் பெல்ட்களை கழற்றிவிட்டு காப்ஸ்யூலுக்குள் சுற்றலாம். அங்கு இருந்தபோது, இதயத் துடிப்பு குறைவாக இருந்தது. எனினும், 3-4 நாட்களில் உடல் அங்குள்ள சூழலுக்கு ஏற்ப தன்னை தகவமைத்து கொண்டது. அதேசமயம், பூமிக்குத் திரும்பும்போது, அதற்கு ஏற்றவாறு உடல் மீண்டும் தன்னை சரி செய்து கொள்ள நேரம் எடுக்கும்.

நான் ஆரோக்கியமாக இருந்தபோதிலும், என்னால் சரியாக நடக்க முடியவில்லை. யாரேனும் என்னை கைத்தாங்கலாக பிடித்துக் கொள்ள வேண்டியிருந்தது. விண்வெளி நிலையத்தில் உணவு ஒரு பெரிய சவால். அங்கு குறைந்த இடமே உள்ளது.

பிரதமர் மோடி: அவர்கள் உங்களை டேக் ஜீனியஸ் என்று அழைத்தார்கள். அதற்குப் பின்னால் உள்ள காரணம் என்ன?

என் பயணம் ஆரம்பம் தான் :

சுபன்ஷு சுக்லா: நான் விமானப்படையில் சேர்ந்தபோது, இனி படிக்க வேண்டியதில்லை என்று நினைத்தேன். ஆனால் அதன் பிறகு நான் நிறைய படிக்க வேண்டியிருந்தது. சோதனை விமானியாக ஆன பிறகு, பொறியியல் துறை சார்ந்து நிறைய படிக்க வேண்டி இருந்தது. இந்த பணிக்காக நாங்கள் நன்கு தயாராக இருந்தோம் என்று நினைக்கிறேன். இலக்கு முடிந்தது. நாங்கள் திரும்பிவிட்டோம். ஆனால் இது ஒரு ஆரம்பம்தான்.

மேலும் படிக்க : விண்வெளி மையத்தில் சுபான்ஷூ : முதல் இந்தியராக சாதனை

குழந்தைகள் பேசுகிறார்கள், அதுவே வெற்றி :

நான் சிறுவனாக இருந்தபோது, ராகேஷ் சர்மா சார் 1984 ஆம் ஆண்டு முதல் முறையாக விண்வெளி வீரராகச் சென்றார். அப்போது, விண்வெளி வீரராக வேண்டும் என்ற கனவு என் மனதில் வரவே இல்லை. ஆனால் நான் விண்வெளி நிலையத்துக்குச் சென்றபோது, குழந்தைகளிடம் மூன்று முறை பேசினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியிலும், எப்படி விண்வெளி வீரராக முடியும் என்று குழந்தைகள் கேட்டார்கள்? இதுவே நம் நாட்டிற்கு பெரிய வெற்றி என்று நினைக்கிறேன்.

இவ்வாறு இருவரின் உரையாடல் அமைந்திருந்தது.

================

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in