Parliament session to reconvene on March 9, decision to table resolution against Lok Sabha Speaker  google
இந்தியா

மாா்ச் 9ல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம் : மக்களவை தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கல்!

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமா்வு மாா்ச் 9 ல் மீண்டும் கூடுகிறது .இதில் மக்களவை தலைவருக்கு எதிரான தீா்மானம் எதிர்கட்சிகளால் தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது

Rohini

மீண்டும் கூடும் கூட்டத்தொடர்

நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் இரண்டாம் கட்ட அமர்விற்கான கூட்டத்தொடர் மாா்ச் 9-ஆம் தேதி தொடங்கி ஏப்.2 வரை நடைபெறவுள்ளது.

அவை அலுவல்களில் தவறாமல் பங்கேற்க வேண்டும் என்று தனது எம்.பி.க்களுக்கு ஆளும் பாஜகவும், எதிா்க்கட்சியான காங்கிரஸும் உத்தரவு பிறப்பித்துள்ளது

எம்பிக்களின் எதிர்ப்பும் அமளியும்

மக்களவையில் குடியரசு தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, சில கருத்துகளை தெரிவித்தார்.

அதற்கு பாஜக எம்பிக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் அவையில் அமளி ஏற்பட்டது

சில காங்கிரஸ் எம்பிக்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி காகிதங்களை வீசியதாகக் கூறப்படுகிறது,

இதனால், அவைக்குள் மேலும் பதற்றத்தை அதிகரித்தது. இந்த இடையூறால், அவை நடவடிக்கைகள் மீண்டும் மீண்டும் தடைபட்டு, தொடர்ந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டது.

மேலும் படிக்க :பிரதமர் மோடியை தாக்க எதிர்க்கட்சிகள் சதி-ஓம் பிர்லா குற்றச்சாட்டு!

ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவேனேயின் நூல் சா்ச்சை

முன்னாள் ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணேயின் வெளியிடப்படாத சுயசரிதை நூல் சா்ச்சை, இந்திய-அமெரிக்க வா்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் ஆவணங்கள் விவகாரம் எனப் பல்வேறு பிரச்னைகளை எழுப்பிய எதிர்கட்சியால் மக்களவையில் வாக்குவாதம் ஏற்பட்ட்டது.

ஓம் பிர்லா எதிர்ப்பு

ஒரு புத்​தகத்​தில் இருந்து அவ்​வாறு மேற்​கோள் காட்​டு​வதற்கு எதி​ரான அவை விதி​களைக் குறிப்பிட்டனர். அது வெளி​யிடப்​பட்​டிருந்​தா​லும் கூட, அவை​யின் நடவடிக்கைகளு​டன் தொடர்​பில்​லாத எந்​தவொரு புத்​தகத்​தில் இருந்​தும் மேற்​கோள் காட்​டு​வது அனு​ம​திக்​கப்​ப​டாது என ஓம் பிர்லா கூறினார்.

மேலும் படிக்க :மக்களவை விதிகளை மீறினாரா ராகுல் : கடும் விமர்சனம்

மேற்காசிய நிலவரம் குறித்து விவாதம் நடத்தப்பட வாய்ப்பு

இந்தியா மீதான அமெரிக்காவின் தொடா் மிரட்டல், மேற்காசியாவில் நீடிக்கும் போா், ஈரானில் அரசியல்-ராணுவ தலைவா்கள் கொலை, வளைகுடா நாடுகளில் 1 கோடி இந்தியா்களின் பாதுகாப்பு, வாழ்வாதாரத்துக்கு எழுந்துள்ள அச்சுறுத்தல் என பல்வேறு பிரச்னைகள் நிலவுகின்றன.

எனவே, மேற்காசிய நிலவரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தப்பட வேண்டும்’ என்று கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் கூறியுள்ளார்.

மேலும் படிக்க :ராகுல் பதவி விலக போர்க்கொடி : பாஜக தீர்மானத்தின் பின்னணி