’ராகுல் பதவி விலக போர்க்கொடி : பாஜக தீர்மானத்தின் பின்னணி

Nishikant Dubey on Rahul : ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், பதவி விலக வலியுறுத்திம் பாஜக எம்பி நிஷிகாந்த் துபே மக்களவையில் தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
Rahul Gandhi should be removed from the Lok Sabha. Nishikant Dubey
Rahul Gandhi should be removed from the Lok Sabha. Nishikant Dubeygoogle
1 min read

நிஷிகாந்த் துபே கூறுவது என்ன

Rahul Gandhi should be removed from Lok Sabha. Nishikant Dubey given notice : ராகுல் காந்தி இந்தியாவுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் ஜார்ஜ் சோரஸ் போன்ற சக்திகளுடன் சேர்ந்து கொண்டு நாட்டை தவறாக வழிநடத்துகிறார் என்பது குறித்து மக்களவையில் குறிப்பிட்டு இன்று (பிப். 12) தீர்மானம் ஒன்றை முன்மொழிந்துள்ளேன்.

அந்த தீர்மானத்தில், ராகுல் காந்தியின் உறுப்பினர் பதவி ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தேர்தலில் போட்டியிட வாழ்நாள் தடை விதிக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

மக்களவையில் உரை​யாற்​றிய ராகுல்

மக்களவையில் பேசிய ராகுல், நாம் தற்போது போர் சகாப்த சூழலில் தான் வாழ்த்துக்கொண்டிருக்கிறோம் என்றும் . உக்​ரைன், காசா, மத்​திய கிழக்​கு​ நாடுகளில் போர்​கள் நடைபெற்று வரு​கின்​றன.

ஈரானில் போர் அச்​சுறுத்​தல் இருக்கிறது என்றும் மக்​கள் ​தொகை தான் நம்​மிடம் இருக்கக் கூடிய மிகப்​பெரிய சொத்​து. அது நமது பலம் என்று குறிப்பிட்டு பேசியிருந்தார்.

தீர்மானத்தை முன்மொழிந்த நிஷிகாந்த் துபே

நிஷிகாந்த் துபே முன்மொழிந்த தீர்மானத்தின் படி ராகுல் காந்தியை, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கியாக வேண்டும்.

மேலும் மீண்டும் அவர் பதவியை தொடர் அனுமதிக்க கூடாது போன்றவற்றை முன்வைத்து தீர்மானத்தை மக்களவையில் முன்மொழிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Thamizh Alai
www.thamizhalai.in