மோடி ஜப்பான் பயணம் :
PM Narendra Modi Japan Visit : இரண்டு நாட்கள் அரசு முறைப் பயணமாக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவை (Shigeru Ishiba) சந்தித்து பேசினார். அப்போது இருநாடுகள் இடையே பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு :
மேலும், அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 6 லட்சம் கோடி ரூபாயை முதலீடு செய்யவும் ஜப்பான்(Japan Investments in India) முன்வந்து இருக்கிறது. இரு நாடுகளின் வருடாந்திர உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, டோக்கியோவில் 16 மாகாண கவர்னர்களையும் சந்தித்து பேசினார்.
புல்லட் ரயிலில் மோடி :
இதைத்தொடர்ந்து, புல்லட் ரயிலில் பிரதமர் நரேந்திர மோடி பயணித்தார்(PM Modi Travelled Bullet Train in Japan). அவருடன் அந்நாட்டு பிரதமர் ஷிகெரு இஷிபாவும் சென்றார். பயண விவரத்தை தனது எகஸ் தளத்தில் அவர் பதிவிட்டு உள்ளார். பிரதமர் நரேந்திர பதிவிட்டு இருக்கும் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.
ஜப்பான் பிரதமருடன் மோடி பயணம் :
“ஜப்பான் பிரதமருடன் புல்லட் ரயிலில் பயணிக்கிறேன். இருவரும் ஒரே பெட்டியில் செல்கிறோம். சென்டை நகருக்கு எங்கள் பயணம் செல்கிறது” என பிரதமர் மோடி குறிப்பிட்டு இருக்கிறார். இதேபோன்று, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபாவும் (PM Modi with Shigeru Ishiba) இந்தப் பயணம் தொடர்பான விவரங்களை பதிவிட்டு இருக்கிறார்.
மோடிக்கு உற்சாக வரவேற்பு :
சென்டை வந்த பிரதமர் மோடிக்கு ஜப்பான் மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் ஜப்பான் ரயில்வேயில் பயிற்சி பெற்று வரும் இந்திய ரயில் ஓட்டுநர்களை அவர் சந்தித்து பேசினார்.
மேலும் படிக்க : ஜப்பான் 6 லட்சம் கோடி முதலீடு: சந்திரயான் திட்டத்திலும் கைகோர்ப்பு
சீனா செல்கிறார் பிரதமர் மோடி :
ஜப்பான் பயணத்தை நிறைவு செய்து சீனா செல்லும் பிரதமர் நரேந்திர மோடி(PM Modi China Visit), ஷாங்காய் உச்சி மாநாட்டில் பங்கேற்கிறார். அந்நாட்டு அதிபர் ஜா ஜின்பிங், ரஷ்ய அதிபர் புதினையும் அவர் சந்தித்து பேச உள்ளார். மூன்று தலைவர்களின் சந்திப்பு, அமெரிக்காவுக்கு பெரும் தலைவலியாக மாறும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.
===============