PM Narendra Damodardas Modi 75th Birthday Celebration Biography in Tamil 
இந்தியா

"Modi 75" : 140 கோடி இந்தியரின் அடையாளம் : செல்வாக்கு மிக்க தலைவர்

நரேந்திர மோடி உலகம் முழுவதும் உச்சரிக்கப்படும் செல்வாக்கு மிக்க தலைவரின் பெயர். எத்தனை இடர்கள் வந்தாலும், அவற்றை தைரியமாக எதிர்கொண்டு, சமாளிப்பதில் வல்லவர்தான் நரேந்திர தாமோதர தாஸ் மோடி.

Kannan

பிரதமர் மோடி பிறந்தநாள் :

PM Narendra Damodardas Modi 75th Birthday : சாமான்ய குடும்பத்தில் பிறந்து உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக வலம் வரும் அவர், எட்டு வயதில் ஆர்எஸ்எஸ்-சில் தொடங்கி இன்றுவரை சமூகத்திற்காக தன்னை அர்ப்பணித்துக் கொண்டு செயல்படுகிறார். நரேந்திர தாமோதர்தாஸ் மோடி - பிரதமர் மோடியாக மாறிய வரலாறு அவரது பிறந்தநாள் முன்னிட்டு சுருக்கமாக பார்ப்போம்.

RSS இயக்கத்துடன் அரசியல் பயணம் :

வடகிழக்கு குஜராத்தின் வாட்நகரில் 1950ம் ஆண்டு செப்டம்பர் 17ம் தேதி சாதாரண குடும்பத்தில் மோடி பிறந்தார்(Narendra Modi Biography in Tamil). தாமோதர் தாஸ் முல்சந் மோடி - கீரபேன்னுக்கு பிறந்த ஆறு குழந்தைகளில் மூன்றாவதாக பிறந்தவர் தான் நரேந்திர தாமோதர்தாஸ் மோடி. இடைநிலைக் கல்வியை முடித்த அவர், எட்டு வயதில் ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார்.1978ம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் இளங்கலைப் பட்டம், 1983ல் குஜராத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் முதுகலைப் பட்டம் பெற்றார் மோடி(Narendra Modi Education). 1971ல் அதாவது தனது 21வது வயதில், ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் முழுநேர ஊழியரானார். அதன்பிறகு 1985ல் பாஜகவில் தன்னை இணைத்துக் கொண்டார் மோடி. அடிமட்ட தொண்டனாக தொடங்கிய அவர் பயணம், பொதுச் செயலாளர் பதவி வரை உயர்த்தியது. இலட்சுமண்ராவ் இனாம்தார் என்பவர் தான் மோடியின் அரசியல் வழிகாட்டி.

ரத யாத்திரை வெற்றிக்கு காரணமானவர் :

சோம்நாத் முதல் அயோத்தி வரை பாஜக மூத்த தலைவர் அத்வானி மேற்கோண்ட ரத யாத்திரை மற்றும் கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீர் வரையிலான யாத்திரைக்கான ஏற்பாடுகளை செய்யும் பொறுப்பினை ஏற்ற மோடி, வெற்றிகரமாக நடத்தி காட்டினார். இதன் மூலம் மோடிக்கு இமாச்சல், குஜராத் தேர்தல் பொறுப்பாளர் பதவியை வழங்கி அழகு பார்த்தார் அத்வானி. 1998ம் ஆண்டு வாஜ்பாய் பிரதமராக பதவியேற்ற போது, மோடிக்கு ‘தேசிய செயலாளர்’ பதவியும் வழங்கப்பட்டது.

2,063 நாட்கள் குஜராத் முதலமைச்சர் :

குஜராத் முதல்வர் கேசுபாய் படேல் பதவி விலகியதை அடுத்து நடந்த இடைத் தேர்தலில், நரேந்திர தாமோதர்தாஸ் மோடி வெற்றி பெற்று 2001ம் ஆண்டு அக்டோபர் 7 குஜராத் முதல்வர் ஆனார்(Narendra Modi As Gujarat CM). பின்னர் 2007 தேர்தலிலும் வெற்றி பெற்று குஜராத் முதல்வராக தொடர்ந்தார். மொத்தம் 2 ஆயிரத்து 63 நாட்கள் முதல்வர் பதவியில் இருந்த மோடி, குஜராத்தின் இன்றைய வளர்ச்சியில் பெரும்பங்கு ஆற்றி இருக்கிறார். இதன்மூலம் குஜராத் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் என்ற பெருமை அவருக்கு கிடைத்தது. நான்கு முறை அவர் முதல்வராக இருந்ததால், தொழில் வளர்ச்சியில் குஜராத் அபார செழிப்பை எட்டியது.

மூன்று முறை இந்தியாவின் பிரதமர் :

அடுத்த அவரது பயணம் தேசிய அரசியலை நோக்கி நகர்ந்தது. 2014 மக்களவை தேர்தலில் பிரதமர் வேட்பாளராக அறிமுகம் செய்யப்பட்ட நரேந்திர மோடி(Narendra Modi As PM Of India), நாடு முழுவதம் பயணம் செய்து மக்களை சந்தித்தார். இரண்டு மாதங்களில் 3 லட்சம் கிலோ மீட்டர் பயணித்த அவர், 430 பொதுக் கூட்டங்களில் உரையாற்றினார். இந்த எழுச்சிப் பயணம், பேராதரவாக மாற, பாரதிய ஜனதா கட்சி 282 இடங்களை கைப்பற்றி ஆட்சியமைத்தது. வாரணாசி தொகுதியில் 3,71,784 வாக்குகள் வித்தியாசத்தில் மோடி வெற்றி பெற்றார்.

வாரணாசி தொகுதியின் வெற்றியாளர் :

2019 மக்களவை தேர்தலிலும் பாரதிய ஜனதா 303 இடங்களையும் கைப்பற்றி தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது. இந்த முறை வாரணாசி தொகுதியில் இருந்து 4 லட்சத்து 79 ஆயிரத்து 505 வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார்.

மூன்றாவது முறை 2024 மக்களவை தேர்தலில் பாஜகவுக்கு, 240 இடங்கள் மட்டுமே கிடைத்தாலும், தேசிய ஜனநாயக கூட்டணி ஆதரவுடன் நரேந்திர மோடி 3வது முறையாக பிரதமராகி, நாட்டை வழிநடத்தி வருகிறார். இந்த முறை வாரணாசி தொகுதியில் 1 லட்சத்து 52 ஆயிரத்து 513 வாக்குகளில் அவர் வெற்றி பெற்றார்.

நேரு சாதனையை முறியடிப்பார் மோடி :

சுதந்திர இந்திய வரலாற்றில் முதல் பிரதமரான நேரு, 1947 முதல் 1964 வரை பொறுப்பில் இருந்தார். அவரை தொடர்ந்து இந்திரா காந்தி மூன்று முறை பிரதமர் பதவியை வகித்தாலும், தொடர்ச்சியாக இருந்தது கிடையாது. நீண்ட நாட்கள் பிரதமர் வரிசையில் இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்து 2வது இடத்திற்கு முன்னேறி இருக்கும் மோடி(Narendra Modi Second Longest Serving PM of India), நேருவின் சாதனையையும் முறியடிப்பார்.

மோடியின் மக்கள் நலத்திட்டங்கள் :

பிரதமராக பொறுப்பேற்ற பிறகு மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மக்களுக்கு கொண்டு வந்த நலத்திட்டங்கள் ஏராளம். அவற்றில் சிறப்பு வாய்ந்த சிலவற்றை பார்ப்போம். ” ஜன்தன் யோஜ்னா, திறன் இந்தியா இயக்கம், இந்தியாவில் தயாரிப்போம், தூய்மை பாரத இயக்கம்,

சன்சத் ஆதர்ஷ் கிராம் யோஜனா, பேட்டி ( Beti ) பச்சாவோ பேட்டி படாவோ, PM முத்ரா யோஜ்னா, பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா யோஜனா - டிஜிட்டல் இந்தியா, தங்கத்தை பணமாக்குதல் திட்டம், கிசான் யோஜ்னா திட்டம் உள்ளிட்டவை.

92 முறை வெளிநாட்டு பயணம் :

2014 முதல் 2025 செப்டம்பர் வரை பிரதமர் மோடி, 92 முறை வெளிநாட்டு பயணங்களை(Narendra Modi Foreign Visit) மேற்கொண்டுள்ளார், ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்குச் சென்றது உட்பட 78 நாடுகளுக்கு அவர் சென்றிருக்கிறார். இந்தப் பயணங்கள் மூலம் நல்லுறவு வலுப்பெற்றதோடு, உலக அரங்கில் இந்தியா எழுச்சி பெற்று வலிமை வாய்ந்த நாடாக மாறவும் உதவியது. இன்றைய சூழலில் இந்திய பொருட்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரியை விதித்தாலும், அதை பொருட்படுத்தாமல், தனது வர்த்தகத்தை இந்தியா மற்ற நாடுகளுக்கு விரிவுபடுத்த இது உதவியாக இருக்கிறது.

சர்வதேச விருதுகளுக்கு பெருமை :

வெளிநாட்டு பயணங்களின் போது, பிரதமர் மோடிக்கு சவுதி அரேபியா, ஆப்கானிஸ்தான், பாலஸ்தீனம், மாலத்தீவு, பஹ்ரைன், ரஷ்யா, பூடான், பிஜி, எகிப்து உள்ளிட்ட நாடுகள் உயரிய விருதுகளை வழங்கி கௌரவித்தன.

பரிசு பொருட்கள் ஏலம், பெண்களுக்கு உதவி :

குஜராத் முதல்வராக இருந்த போது தனக்கு கிடைத்த பரிசு பொருட்களை ஆண்டு தோறும் ஏலம் விட்டு, இந்த நிதியை பெண் குழந்தைகள் நலத் திட்டத்திற்கு கொடுத்தார். இதேபோன்று, பிரதமர் பதவி காலத்திலும் தனக்கு கொடுக்கப்பட்ட பரிசுப் பொருட்களை ஏலம் விட்டு அதன் மூலம் கிடைக்கும் தொகை, கங்கையைப் பாதுகாக்கும் "நமாமி கங்கா" திட்டத்திற்கு மோடி அளித்து வருகிறார். தனக்கு அன்புடன் வழங்கப்பட்ட பரிசு பொருட்களை ஏலம் விட்டு அதை நலத் திட்டங்களுக்கு கொடுத்த முதல் இந்திய பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

மனதின் குரல் மூலம் கலந்துரையாடல் :

மனதில் குரல் என்ற வானொலி நிகழ்ச்சி மூலம், 2014 முதல் அவர் நாட்டு மக்களுடன் உரையாடி வருகிறார்(Narendra Modi's Mann Ki Baat). மாதம் ஒரு முறை மனதில் குரல் மூலம், அன்றாட நிர்வாகத்தின் பிரச்சினைகள் பற்றி மக்களிடம் அவர் விளக்கி வருகிறார். குறிப்பாக கலைஞர்கள் தனித்துவம் மிக்க நபர்கள், சாதனையாளர்களின் வெற்றிகளை நாட்டு மக்களுக்கு எடுத்துக்கூறி அவர்களையும் ஊக்கப்படுத்தி வருகிறார்.

ராணுவ வீரர்களுடன் தீபாவளி :

இதேபோன்று, பிரதமராக பதவியேற்றது முதல் ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி திருநாளை(PM Modi Diwali 2025) ராணுவ வீரர்களுடன் கொண்டாடி மகிழ்கிறார்.

தேர்வு எழுதப்போகும் மாணவர்கள், அவர்தம் பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுடன் உரையாடும் "ப்ரிக்சா பே சர்ச்சா" என்ற நிகழ்ச்சியிலும் அவர் தொடர்ச்சியாக பங்கேற்று வருகிறார்.

தமிழகத்திற்கு எண்ணற்ற திட்டங்கள் :

பல்வேறு மாநிலங்களுக்கு சென்று புதிய திட்டங்களை தொடங்கி வைத்து வரும் பிரதமர் மோடி, தமிழகத்திலும் சென்னை முதல் ராமநாதபுரம் வரை பல்வேறு திட்டங்களை மக்களுக்காக அர்ப்பணித்து இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்திற்கு, 3 லட்சம் கோடி ரூபாயை மத்திய அரசு அளித்துள்ளது; இது, முந்தைய காங்கிரஸ் கூட்டணி அரசு வழங்கிய தொகையை விட மூன்று மடங்கு அதிகம். 11 ஆண்டுகளில், தமிழகத்திற்கு 11 புதிய மருத்துவ கல்லுாரிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன.

சீன அதிபருடன் மாமல்லபுரத்தில் சந்திப்பு :

2109ம் ஆண்டு சீன அதிபர் ஜி ஜின்பிங்கை தமிழகம் வரவழைத்து, மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்திய பிரதமர் மோடி, 2 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்தியா - சீனா உறவை மேலும் வலுவுள்ளதாக மாற்றினார். ஒவ்வொரு முறையும் அவர் தமிழகம் வரும் போது, பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையுடன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று, நமது கலாச்சாரத்தை போற்றி வருகிறார். தமிழக தலைவர்கள், சுதந்திர போராட்ட தியாகிகளை அவர்களின் பிறந்த நாளன்று நினைவு கூர்ந்து போற்றுவதை பிரதமர் மோடி தொடர்ந்து செய்து வருகிறார்.

கொரோனா - இந்தியாவை மீட்டார் :

உலகையே புரட்டி போட்ட கொரோனா பாதிப்பில் இருந்து இந்தியாவை மீட்ட பெருமை பிரதமர் மோடியை சேரும். கொரோனா தொற்று ஏற்பட்ட சில வாரங்களில் அதற்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது. இதை 130 கோடி மக்களுக்கும் இலவசமாக போடுவற்கான உத்தரவில் கையெழுத்திட்டு, அதனை சிறப்பாக நடைமுறைப்படுத்திக் காட்டினார். மேலும், கொரோனா பாதித்த நாடுகளுக்கும் தடுப்பூசியை ஏற்றுமதி செய்து இந்தியாவின் பெருமையை நிலைநாட்டினார்.

பாகிஸ்தானுக்கு பதிலடி :

கடந்த மே மாதம் நடத்தப்பட்ட பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானில் செயல்படும் தீவிரவாதிகளுக்கு ஆபரேஷன் சிந்தூர் மூலம் சரியான பதிலடி கொடுக்கப்பட்டது. இதன்மூலம் உலக அரங்கில் இந்தியாவின் பெருமை உயர்ந்து, வலிமையும் வெளிப்படுத்தப்பட்டது.

மேலும் படிக்க : Modi : சீன சமூக வலைதளங்களில் முதலிடம் : டிரண்டிங்கில் பிரதமர் மோடி

இந்தியாவிற்கே முன்னுரிமை :

2014 ஆம் ஆண்டு பதவியேற்றது முதல், அரசின் கொள்கை உருவாக்கம் மற்றும் செயல்பாட்டில் 'இந்தியாவை முதலில்' நிறுத்தி பிரதமர் மோடி உறுதியுடன் செயல்படுத்தி வருகிறார். வைத்திருக்க வேண்டும் என்ற தனது தீர்மானத்தில் திரு. மோடி உறுதியாக இருந்து வருகிறார். ராஜதந்திர முறையில் அவர் மேற்கொள்ளும் அணுகுமுறைகள் மூலம், வல்லரசு நாடுகளே இந்தியாவின் நட்பு தேவை என்று நாடி வரும் நிலையை உருவாக்கி இருக்கிறார்.

உலக அரங்கில் நரேந்திர மோடி :

2014 முதல் சிறப்பான ஆட்சி, மக்கள் நலத் திட்டங்கள், நேர்மையான நிர்வாகம், வெளிப்படையான அணுகுமுறை, வெளிநாடுகளுடன் நல்லுறவை வெளிப்படுத்தினாலும், எப்போதும் இந்தியாவை விட்டுக் கொடுக்காத தன்மை உள்ளிட்டவையே பிரதமர் மோடியின் புகழ் உலக அரங்கில் நிலைத்து நிற்க காரணம்.

=====