PM Narendra Modi About Congress RJD Party Insult Of His Mother  
இந்தியா

அவமானப்படுத்தப்பட்டது எனது தாயார் மட்டுமல்ல : மோடி உருக்கம்

பிகாரில் தனது தாயார் பற்றி காங்கிரஸ், ஆர்ஜேடி பேசிய கருத்துகள் தனது தாயாருக்கு மட்டுமல்ல, நாட்டின் அனைத்து தாய்மார்கள், சகோதரிகள் மற்றும் மகள்களுக்கு இழைக்கப்பட்ட அவமானம் என்று பிரதமர் மோடி கூறினார்.

MTM

PM Narendra Modi About Congress : பிகாரில் பெண்களுக்கு குறைந்த வட்டியில் நிதி உதவி அளிக்கும் ஜீவிகா திட்டத்தை பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். பீகார் முதலமைச்சர் நிதீஷ் குமார், துணை முதலமைச்சர்கள் சம்ராட் சவுத்ரி மற்றும் விஜய் சின்ஹா ஆகியோர் முன்னிலையில் இந்த விழா நடைபெற்றது.

இந்த விழாவில் பீகார் அரசுக்கு வாழ்த்து தெரிவித்த பிரதமர், இதை ஒரு "அற்புதமான முயற்சி" என்று வர்ணித்தார். இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய அடிப்படையாக பெண்களின் மேம்பாடு உள்ளது என்று உறுதிப்படுத்தினார்.

பெண்களை மேம்படுத்த, அவர்களின் வாழ்க்கையில் உள்ள அனைத்து வகையான சிரமங்களையும் நீக்குவது அவசியம். அதனால்தான், தாய்மார்கள், சகோதரிகள், மகள்களின் வாழ்க்கையை எளிதாக்க பலவற்றைச் செய்து வருகிறோம் என்றும் பிரதமர் கூறினார்.

தாய் நமது உலகம். தாய் நமது சுயமரியாதை. பாரம்பரியம் மிக்க இந்த பீகாரில் சில நாட்களுக்கு முன்பு நடந்தவற்றை நான் கற்பனை செய்து கூட பார்க்கவில்லை. ஆர்ஜேடி-காங்கிரஸ் மேடையில் என் தாயாரை அவமதித்தனர்.இந்த அவமானங்கள் என் தாயாருக்கு மட்டுமல்ல, நாட்டின் தாய்மார்கள், சகோதரிகள், மகள்களுக்கு இழைக்கப்பட்டவை. இதைப் பார்த்து, கேட்ட பிறகு, பீகாரின் ஒவ்வொரு தாயாரும் எவ்வளவு வேதனைப்பட்டிருப்பார்கள் என்பது எனக்குத் தெரியும். என் இதயத்தில் உள்ள வலியைப் போலவே, பீகாரின் மக்களும் அதே வலியை உணர்கிறார்கள் என்று பிரதமர் மோடி கூறினார்.

மேலும் படிக்க : PM Modi: ’ஜப்பான்-இந்தியா தொழில்நுட்ப புரட்சி’: பிரதமர் மோடி உறுதி

எனது தாய் என்னைப் பிரித்து, உங்களைப் போன்ற கோடிக்கணக்கான தாய்மார்களுக்கு சேவை செய்ய அனுப்பினார். இப்போது என் தாய் உயிருடன் இல்லை. சில காலத்திற்கு முன்பு, 100 வயதை நிறைவு செய்து அவர் எங்களை விட்டு பிரிந்தார். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத, இப்போது இல்லாத என் தாயை, ஆர்ஜேடி-காங்கிரஸ் மேடையில் பேசி அவமதித்தனர். சகோதரிகளே, தாய்மார்களே, உங்கள் முகங்களைப் பார்க்கிறேன்; உங்களுக்கு ஏற்பட்ட வேதனையை என்னால் உணர முடிகிறது. சில தாய்மார்களின் கண்களில் கண்ணீரைப் பார்க்கிறேன். இது மிகவும் துயரமானது, வேதனையானது என்று மேலும் அவர் கூறினார்.