இந்தியாவை பகைத்த மாலத்தீவு :
PM Modi on India Loan to Maldives : இந்திய பெருங்கடல் பகுதியில் அமைந்துள்ள தீவு நாடு மாலத்தீவு. இந்தியாவின் நெருங்கிய நட்பு நாடாக இருந்த மாலத்தீவு, அத ன்காரணமாக பல்வேறு பலன்களை பெற்று வந்தது. ஆனால், 2023ல் நிலைமை தலைகீழானது. இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்தை வைத்தே அதிபர் பதவியை பிடித்தார் முய்சு. அவரது செயல்பாடுகளும், மாலத்தீவு அமைச்சர்களின் கருத்துகளும் இருநாட்டு உறவை மோசமாக்கின.
மாலத்தீவை உதறிய சீனா :
சீனாவுடன் நட்புறவை வளர்த்து அதிக லாபம் பார்க்க திட்டம் போட்ட அதிபர் முய்சுவின் முயற்சி எதிர்பார்த்த பலனை அளிக்கவில்லை. இந்திய பெருங்கிடலில் ஆதிக்கம் செலுத்த முயற்சித்த சீனா இறுதியில் மாலத்தீவை உதறித் தள்ளியது, பழைய நண்பனான இந்தியாவே மேல் என்ற முடிவுக்கு வந்தார் முய்சு. நிலைமை படிப்படியாக சீரடைந்து, நட்புறவு மேம்பட்டது. இதையடுத்து இந்த ஆண்டு மாலத்தீவு(Maldives Independence Day 2025) தேசிய தினத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள பிரதமர் மோடிக்கு அதிபர் முய்சு அழைப்பு விடுத்தார்.
’நம்பகமான நண்பனாக இந்தியா’ :
இதை ஏற்ற பிரதமர் மோடி அரசு முறைப்பயணமாக மாலத்தீவு சென்றிருக்கிறார். அதிபர் முய்சுவுடன் இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்தும் விதமாக அவர் ஆலோசனை நடத்தினர். அப்போது மாலத்தீவின் மேம்பாட்டிற்காக இந்தியா ரூ.4850 கோடி கடனை அளிக்கும் என்று மோடி அறிவித்தார். மாலத்தீவின் ’நம்பகமான நண்பனாக இந்தியா’ இருக்கும் என்றும் பிரதமர் மோடி உறுதியளித்தார்.
மேலும் படிக்க : பிரிட்டனுடன் வர்த்தக ஒப்பந்தம்: மோடி முன்னிலையில் நாளை கையெழுத்து
கடலை விட ஆழமானது நட்பு :
இரு நாடுகளின் உறவுகள் வரலாற்றை விடவும் பழமையானவை என்றும், கடலைப்போல் ஆழமானவை என்றும் மோடி தெரிவித்தார். இந்தச் சந்திப்பு தொடர்பாகப் பிரதமர் மோடி குறிப்பிட்டார். ”இந்தியாவுக்கு எப்போதும் நட்பே முதன்மையானது" என்பதை சுட்டிக்காட்டிய அவர், இனி இந்த உறவு பிரகாசமாக இருக்கும் எனத் தெரிவித்தார்.
மாலத்தீவுக்கு ரூ.4,850 கோடி கடனுதவி :
இந்தியா அளித்துள்ள 4,850 கோடி ரூபாய் கடனுதவி(India Loan Maldives Amount in INR) மாலத்தீவு மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப வளர்ச்சித் திட்டங்களுக்குப் பயன்படுத்தப்படும். விரைவில் இருநாடுகள் இடையே முதலீட்டு ஒப்பந்தமும் கையெழுத்தாக உள்ளது. பிரதமர் மோடியின் இந்தப் பயணத்தின்போது கையெழுத்தான ஒப்பந்தம் இந்தியாவுக்கு மாலத்தீவுகள் செலுத்த வேண்டிய ஆண்டு கடன் தொகையை 40% குறைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
=============