
நடுநிலையோடு இந்திய அரசு :
PM Modi Sign India-UK Free Trade Agreement : அனைத்து நாடுகளுடனும் நல்லுறவை மேம்படுத்துவதில் இந்தியா கூடுதல் கவனம் செலுத்தி வருகிறது. இதன் காரணமாக மற்ற நாடுகளின் உள் விவகாரங்களில் தலையிடுவதும் கிடையாது. ரஷ்யா-உக்ரைன் போர், இஸ்ரேல்-ஈரான், அமெரிக்கா சண்டையில் இந்தியா தலையிடாமல் நடுநிலை வகிக்கிறது. இதன் காரணமாக இந்தியாவுடன் வர்த்தகம் மேற்கொள்வதில் அனைத்து நாடுகளும் ஆர்வம் காட்டுகின்றன.
தாராள வர்த்தக ஒப்பந்தம் :
இந்தியாவுக்கு நட்பு நாடாகவே திகழ்ந்து வரும் பிரிட்டனும், தாராள வர்த்தக ஒப்பந்தம்(India UK Free Trade Agreement) மேற்கொள்ள ஆர்வம் காட்டி வருகிறது. பிரிட்டன் உடன் தாராள வர்த்தக ஒப்பந்தம் செய்துகொள்ள மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் அளித்துள்ளது.
பிரதமர் மோடி பிரிட்டன் பயணம் :
இந்தநிலையில், பிரதமர் நரேந்திர மோடி(PM Modi Visit UK), நான்கு நாள் அரசுமுறை பயணமாக பிரிட்டன் மற்றும் மாலத்தீவுகளுக்கு புறப்பட்டுச் சென்றார். அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டாமரை சந்தித்து இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவது குறித்து பேச்சு நடத்த உள்ளார். லண்டனில் நாளை நடைபெறும் இந்த சந்திப்பின் போது, தாராள வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகிறது.
வரி விலக்கு கிடைக்கும் :
இந்த ஒப்பந்தம் வாயிலாக இந்தியாவில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் கார்கள், துணிகள், வேளாண் உட்பட 99 சதவீத பொருட்களுக்கு வரி விலக்கு கிடைக்கும். அதே போல் பிரிட்டனில் இருந்து இறக்குமதியாகும் மதுபானங்கள், கார்களுக்கான வரியும் நீக்கப்படுவதால், இனி இவற்றின் விலை கணிசமாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மாலத்தீவு செல்கிறார் மோடி :
பிரிட்டன் பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு, நம் அண்டை நாடான மாலத்தீவுகளுக்கு ஜூலை 25, 26 ஆகிய இரண்டு நாட்கள், பிரதமர் மோடி அரசுமுறை பயணமாக செல்லகிறார்(PM Modi Visit Maldives). அந்நாட்டின் 60வது தேசிய தின விழாவில் சிறப்பு விருந்தினராக(Maldives Independence Day 2025) பங்கேற்கும் அவர், அந்நாட்டு அதிபர் முஹமது முய்சுவை சந்தித்து பேசுகிறார்.
=====